- Ads -
Home இந்தியா வெறிச்சோடிய சபரிமலை சந்நிதானம்; பாஜக., பிரமாண்ட பேரணி

வெறிச்சோடிய சபரிமலை சந்நிதானம்; பாஜக., பிரமாண்ட பேரணி

பத்தனம்திட்டை: சபரிமலை சந்நிதிதானம் ஐப்பசி மாதப் பிறப்பு பூஜையை ஒட்டி, 5  நாட்களுக்குத் திறக்கப் பட்டுள்ளது. நடை நேற்று திறக்கப் பட்டதை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வழக்கமாக பக்தர்கள் அதிக அளவில் வருவர். ஆனால் இந்த முறை கூட்டம் வெகுவாகக் குறைந்தே காணப்பட்டது.

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை அடுத்து, அதை எப்படியாவது நடைமுறைப் படுத்த வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக, எதிர்ப்பாளர்களை அடக்கவும் அடிக்கவும், போலீஸ் பலம் கொண்டு முயன்று வருகிறது.

இந்நிலையில் நேற்று பம்பையிலும், நிலக்கல்லிலும் நடைபெற்ற தடியடி தகராறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியில் பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

ஏற்கெனவே கடந்த மாதம் பெய்த மழை வெள்ளத்தில் பம்பை நதி உருக்குலைந்து கிடக்கிறது. எனவே உடனே பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று சொன்னது தேவஸ்வம் போர்டும் மாநில அரசும்.

ஆனால் அந்த நிலைமை சீரடைவதற்குள், பெண்களை எப்படியாவது சபரிமலை கோயிலுக்குள் அனுப்பி, ஆலய நம்பிக்கைகளை சீர்குலைக்க வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு.

இத்தகைய போக்குகளாலும், 144 தடை உத்தரவு பிறப்பித்து அரசு மேற்கொண்ட கெடுபிடிகளாலும், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி நடத்தி காட்டுமிராண்டித்தனத்தை போலீஸார் வெளிப்படுத்துவதாலும், பக்தர்கள் அதிக அளவில் செல்லவில்லை. இதனால் வெறும் ஐநூறு பேர் மட்டுமே தரிசனத்துக்கு இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். அதே நேரம், போலீஸார் மட்டுமே கூடுதலாக பணியில் அமர்த்தப் பட்டு, சபரிமலை சந்நிதியைச் சுற்றிலும் அமர்ந்திருப்பதாக கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version