கரூர் அருகே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ராகுல் காந்தி சாமியார் ஆகிவிட்டால் நாட்டுக்கு நல்லது என்றார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பபட்டி பகுதியில் அனைவருக்கும் நல வாழ்வுமைய்யம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த மையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நலவாழ்வு மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்., மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு கட்டிடங்களில் ஒன்றை மத்திய அமைச்சரும் மற்றொன்றை தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து சுகாதார மைய்ய வளாகத்தில் இருவரும் மரக்கன்றுளை நட்டு வைத்து நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தொடர்ந்து பா.ஜ.க., திமுக கூட்டணி குறித்து கூறி வருகின்றாரே என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்து பேச இது உகந்த நேரமல்ல என்றும்., தேர்தல் நெருங்கி வரும் போது தான் இது குறித்து பேசுவார்கள் என்றும் கூறினார். மேலும், தம்பிதுரை நாடளுமன்றத்தின் துணை சபாநாயகர்., நல்ல மனிதர்., அவர் ஒரு கருத்து கூறுகிறார் எனபதற்காக நான் எதிர் கருத்து கூறுவது நன்றாக இருக்காது என்றார்.
Mee too மீ டூ விவகாரம் குறித்த கேள்விக்கு அது முறையான செயலாக இருக்காது என்றும் இது நமது வீட்டு பெண்களை நாம் இழிவு படுத்துவதற்கு சமம். இது ஏற்று கொள்ள முடியாது என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி சமீப காலமாக காவி உடை தரித்து கோவில்களுக்கு சென்று வருகிறார். அவர் சாமியாராகி விடுவார் போலிருக்கிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு., அவர் சாமியார் ஆனால் நாட்டுக்கு நல்லது என்றார்.
அண்மையில் திருச்சி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விமான நிலையத்தின் சுற்று சுவரை இடித்து கொண்டு சென்ற விவகாரம் குறித்த கேள்விக்கு., ஒரு விதத்தில் பயணிகளை பத்திரமாக மும்பையில் கொண்டுசென்று இறக்கி விட்டுள்ளார் விமானி. அதனால் அவரை பாராட்டுகிறேன். என்றாலும் நடந்த சம்பவம் குறித்துவிசாரனை நடத்தப்பட வேண்டும் என்றார்.