தாமிரபரணி புஷ்கரத்துக்காக நெல்லைக்கு வந்த பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, நெல்லை சந்திப்பு அருகில் உள்ள குறுக்குத்துறை தீர்த்தக் கட்டத்தில், புஷ்கர நீராடலை முடித்துக் கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்,. அப்போது அவர்…
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்றையின் கீழ் உள்ள 38,646 கோவில்களையும் வழிபாடு நடக்கும் கோவிலாக 12 மாதத்திற்குள் மாற்றவேண்டும் , இல்லை என்றால் இந்து அமைப்புகளை ஒருங்கிணைத்து மாபெரும் அறப்போராட்டம் நடத்துவோம் !
சபரிமலைப்பிரச்சனையில் கேரள முதல்வர் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள்தான் காரணம் என கூறுவது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு, கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.
12 ஆண்டுக்கு ஒரு முறை புஷ்கரம் நடைபெறும் , 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மஹாபுஷ்கரம் . தாமிரபரணியில் மஹாபுஷ்கரம் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ஆனால் இதில் அரசு உதவி என்பது எந்த நிலையிலும் இல்லை.
தமிழகத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி லஞ்சம் பெரும் மோசமான நிலையை திராவிட கட்சிகள் உருவாக்கி உள்ளனர். அறநிலையத்துறை என்பது இந்து சமயத்தை அழிக்கும் துறையாக செயல்பட்டு வருகிறது.
ஆன்மீக விஷயங்களில் அறநிலையத்துறை தலையீடு இருக்க கூடாது, தலையிடுவதற்கான உரிமையும் இல்லை. கோவில் சொத்துக்களையும் , உண்டியல் காணிக்கைகளையும் கொள்ளையடிக்கும் செயலில்தான் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் 38,646 கோவில்கள் உள்ளது இதில் பல கோவில்கள் பூஜையில்லாமல் பூட்டப்பட்டுள்ளது, சில கோவில்கள் இருந்த இடம் தெரியாமல் அழியும் நிலையில் உள்ளது. எனவே 38,646 கோவில்களையும் 12 மாதத்திற்குள் வழிபாடு நடக்கும் கோவில்களாக மாற்றவேண்டும் , இல்லையே இந்து அமைப்புகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம் .
அதுபோன்று எந்ததெந்த கோவில்களில் எவ்வளவு சொத்து உள்ளது, பூஜை நடக்கும் கோவில்கள் எத்தனை என்ற விவரங்கள் குறித்து அரசு 30 தினங்களுக்குள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
சபரிமலைப் பிரச்சனைக்கு ஆர்.எஸ்.எஸ் , சங்பரிவார் அமைப்புகள்தான் காரணம் என கேரள முதல்வர் பினராய்விஜயன் கூறியிருப்பதற்கு பதில் அளித்த எச்.ராஜா கேரள முதல்வர் கூறுவது அப்பட்டமான பொய்குற்றச்சாட்டு, அவர் இந்து விரோத சக்தி , கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும்.
நடிகர் கமலஹாசன் பாரதிய ஜனதாகட்சி தமிழகத்தில் பின்வாசல் வழியாக நுழைகிறது என்று பேசியிருப்பது குறித்துச் சொன்னால், கமலஹாசன் விஸ்பரூபம் படத்திற்காக மதவாதிகளிடம் மண்டியிட்டு கிடந்தவர் , அவருக்கு பாரதிய ஜனதா கட்சி பற்றி பேச அருகதையில்லை – என்று கூறினார்.