மார்கழி மாதம் 14ம் நாளான இன்று திருவெம்பாவையின் 14வது பாடலை கேட்க இருக்கிறோம்.
”காதார் குழையாட பைம்பூண் கலனாடக்” என்று தொடங்கும் இந்த பாடலை மிக அழகாக அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர். இந்தப் பாடலில் முதல் இரண்டு அடிகள் ஆட என்று வரும், பிறகு வரும் அடிகள் பாடி என்று வரும்.
வேதத்தின் உட்பொருளாக விளங்குபவனைப் பாடி, அப்பொருளாக நிற்கும் அவனது பெருமைகளைப் பாடி, ஒளிமயமானவனி ஆற்றலைப்பாடி அவனது அநாதி முறைப் பழைமையைப் பாடி என்று இன்னும் அவனது பிற பெருமைகளை அனைத்துயும் பாடி மார்கழி நீராடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர்.
நாமும் இந்த பாடலைப் பாடி மார்கழி நீராடி அவன் அருள் பெறுவோம்!