தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூரில் தொடங்கியது! இதில் 500 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் 10 பேர் காயம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் அரியலூர், திருச்சி,பெரம்பலூா், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் கிராமத்தின் வெளிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலிருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை கட்டி தழுவ 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சீறிவந்த காளைகளை அடக்க முயன்றபோது 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சியில், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள். கட்டில். பண பரிசுகள். தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
கடந்தாண்டு அரியலூர் மாவட்டத்தில் 64இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளதாக ஜல்லிக்கட்டு பேரவையினர் தெரிவித்தனர்