”உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று” என்று தொடங்கும் இந்த பாடலில் பாவை நோன்பு இருக்கும் பெண்கள், சிவனிடம் அவன் மேல் கொண்ட பக்தியால்,
உன் அன்பரையே நாங்கள் திருமணம் செய்யவேண்டும். எம்முடைய கைகள் உனக்கு அல்லாது வேறு எந்த வேலையையும் செய்யக்கூடாது. இரவும் பகலும் எம்முடைய கண்கள் வேறு எதையும் கண்டு நிற்கக்கூடாது. எமக்கு இவ்வகை எம் கோமானாகிய நீ அருளினால், சூரியன் எத்திசையில் உதித்தால் தான் எங்களுக்கென்ன ? என்று வேண்டுவதாக மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார்.