இம்ரான்கான் ‘ஹிண்ட்ஸ்’ கொடுத்துவிட்டார்… இனி திமுக., மற்றும் கூட்டணிகள் பேச வேண்டியதுதான் பாக்கி..!

ஜம்மு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்னைகளை திசை திருப்பவே இந்தியா போலி பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்கிறது என இம்ரான்கான் விமர்சனம்

imrankan

இம்ரான்கான் ‘ஹிண்ட்ஸ்’ கொடுத்துவிட்டார்… இனி திமுக., மற்றும் கூட்டணிகள் பேச வேண்டியதுதான் பாக்கி..!

பாகிஸ்தானின் இந்திய கிளைப் பிரிவாகவும், நட்புக் கட்சியாகவும் சர்வதேச அளவில் உருவெடுத்துள்ள திமுக.,வுக்கு அடுத்து என்ன சொல்ல வேண்டும்; போராட்டம் பேட்டிகள் கருத்துகளின் போது  என்னசொல்ல வேண்டும் என்ற குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

அதன்படி, இனி திமுக., இன்றைய கோவை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் செய்தி, பாதுகாப்பு பலப் படுத்த செய்தி இவற்றை, மத்திய அரசின் காஷ்மீர் விவகாரப் பேச்சின் திசை திருப்பல் என்று முழங்கியாக வேண்டும்!

ஏற்கெனவே, ப.சிதம்பரம் கைது நடவடிக்கையைக் குறித்து திமுக.,வினர் கூறியது… தில்லியில் காஷ்மீர் சிறப்புப் பிரிவு 370 நீக்கத்துக்கு எதிராக திமுக., நடத்தவிருந்த  ஆர்ப்பாட்டம் குறித்த கவனத்தை திசை திருப்ப இந்தக் கைது நடவடிக்கை – என்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து  நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து  வருகிறது. இவ்விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க  பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்ட போதும், அதற்கு  தோல்வியே மிஞ்சியது.  இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என உலக நாடுகள் ஒதுங்கிக் கொண்டுள்ளன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்னைகளை திசை திருப்பவே இந்தியா போலி பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்கிறது என இம்ரான்கான் விமர்சனம் செய்துள்ளார்.

இம்ரான் கான் இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

“இந்தியாவில் நாசவேலை  செயல்களில் ஈடுபடுவதற்காக எல்லையில் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊருடுவி இருப்பதாகவும், தென் மாநிலங்களிலும் ஊடுருவி இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்ப இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சி என்பதை கணிக்க முடிகிறது.  காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்னைகளை  திசை திருப்ப போலியான பயங்கரவாத எதிர்ப்பு  நடவடிக்கைகளை இந்திய தலைமை நடத்தும் என்று சர்வதேச சமூகத்தை எச்சரிக்கிறேன்” என்று  பதிவிட்டுள்ளார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :