மாஸ்கோ: ரஷ்யாவில் 132 பேருடன் சென்ற மீன்பிடி கப்பல் திடீரென நீரில் மூழ்கியது. இதில் சென்ற 54க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்றும், பலரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன்பிடிக் கப்பல் இது. மீன்பிடி கப்பலில் பணியாற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் லாட்வியா, உக்ரைன், மியான்மர், வனுவாடு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க் கடல் பகுதியில் இந்த விபத்து நடந்தது. இதுவரை மீட்புப் குழுவினரால் 63 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 15 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில், அந்தப் பகுதியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 25 படகுகள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு இந்த விபத்து நடந்துள்ளது. மீன்பிடி கப்பல் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பனிப் பாறைகளில் கப்பல் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கி 54 பேர் பலி: 15 பேரை மாயம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari