காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் மஸ்தான் பாபு உடல் மீட்பு

Mastan-Babu-deadஐதராபாத்: காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் மஸ்தான் பாபுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தின்போது மஸ்தான் பாபு காணமல் போய், 11 நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை மிகக் குறுகிய காலத்தில் ஏறி சாதனை படைத்தவர். 2006 முதல் 2008 வரை இவர் புரிந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. இவர், 172 நாட்களில் ஏழு சிகரங்களிலும் ஏறி சாதனை படைத்தார். முன்னதாக, அர்ஜெண்டினா மற்றும் சிலி பகுதிகளுக்கு இடையேயான உயர்ந்த மலைப் பகுதியில் ஏறுவதற்காக மேற்கொண்ட பயணத்தில் இந்திய மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு மரணம் அடைந்ததுள்ளார். இதனை அரசு அதிகாரிகள் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக, மஸ்தான் பாபுவின் சகோதரி தொரசனம்மா கூறியிருந்தார்.. ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (40). இரு வாரங்களுக்கு முன்பு மலையேற்றக் குழுவுடன் சென்றார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அவர் காணாமல் போய் விட்டதாக, நெல்லூர் போலீசார் தெரிவித்திருந்தனர். அவரது மரணத்தை அடுத்து, அவரது நண்பர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகள் இணைந்து பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்கி, அதில், தனது விருப்பமான குழந்தையை மலைகள் எடுத்து கொண்டன. அமைதியில் ஆழ்ந்திருக்கவும் மல்லி மதஸ்தான் பாபு என பதிவு வெளியிட்டுள்ளனர். மஸ்தான் பாபு மறைவிற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.