யூ டியூப்பில் இனிமேல் குடும்பத் தலைவர்கள் சமையல் குறிப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினால், பெண்கள் ஒரு முறை அதை பார்த்து விடுவது நல்லது. காரணம், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தினமும் நிர்வாணமாக சமையல் குறிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதை உலகம் முழுவதும் ஆண்கள் அடித்து பிடித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரை சேர்ந்தவர் ரூபி டே. இவர் சமீபகாலமாக யூ டியூப்பில் மிகப் பிரபலம். இவர் காலையில் எப்போது தனது காட்சியை.,… சாரி சமையல் வேலையை தொடங்குவார் என்று லட்சக்கணக்கான ஆண்கள், உலகம் முழுவதும் காத்திருக்கின்றனர்.
அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?
ரூபி டே சமையல் செய்யும்போது, எதையும் அணிவதில்லை. அதாவது பிறந்த மேனியாகதான் சமைக்கிறார். சின்னச்சின்ன பதார்த்தங்கள். இனிப்புகளை அவர் செய்துக் காட்டுகிறார். யூ டியூப்பின் விதிகளுக்காக பயந்து (?), மிக, மிக மெல்லி துணியை மட்டும் ஏப்ரனாக, அதாவது அழுக்கு படக்கூடாது என்பதற்காக கழுத்தில் தொங்கப் போட்டுக் கொள்ளும் துணியை மட்டும் அணிகிறார்.
இப்போது தினமும் அவரை பாலோ செய்பவர்கள் எண்ணிக்கை 9 லட்சம் பேர். இவர் வீடியோவை போட்டதும், உலகம் முழுவதும் இருந்து ஆண்கள் கொத்து, கொத்தாக வந்து அதை பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.
இந்நிலையில், இவரது ரசிகர் பட்டாளத்தையும் அவருக்கு வரும் விளம்பரங்களையும் பார்த்த யூ டியூப் திடீரென, தனிநபர் கணக்கில் விளம்பரங்களை வெளியிட தடை விதித்தது. இது பற்றி ஒரு நாள் கண்ணை கசிக்கிக் கொண்டே தனது வீடியோவில் ரூபி டே புலம்பினார்.
இதைப் பார்த்த வாலிப வயோதிக அன்பர்கள் இப்போது தினமும், ரூபி டே தொடர்ந்து தனது ‘சேவையை’ செய்வதற்காக நன்கொடை அளிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், மீண்டும் உற்சாகத்துடன் சமையல் செய்ய ஆரம்பித்துள்ளார் ரூபி டே.
ஆனால், இவர் போடும் சமையல் வீடியோவின் அளவே இரண்டு நிமிடம்தான். இந்த ரெண்டு நிமிடத்திலே என்னய்யா சமைக்க முடியும் என்று பலர் கிண்டலடிக்க, ”புரோ… சமையலை விட ரசிப்பு முக்கியம்” என்று இன்னொருவர் கமென்ட் பாக்சில் போட்டுள்ளார்.