சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குயான் யிவ் மரணம் அடைந்து விட்டதாக இணைய தளத்தில் பரவிய செய்தி வதந்தி என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெற்று புதிய நாடாக உருவாகக் காரணமாக அமைந்தவர்களில் முக்கியமான ஒருவர் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குயான் யிவ் (91). இவர், கடந்த சில நாட்களாக நுரையீரல் அழற்சி நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் பிப்ரவரி 5இல் இருந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அண்மையில் அவரது உடல் நிலை மோசமானது. இந்நிலையில் இவர் நேற்று இரவு மரணம் அடைந்து விட்டதாக சிங்கப்பூரில் இயங்கும் ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அதைப் பின்பற்றி பல வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனால், தற்போது சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம், முன்னாள் பிரதமர் லீ மரணம் அடையவில்லை என செய்தி வெளியிட்டு தெளிவு படுத்தியுள்ளது. மேலும் இவ்வாறு வதந்தி பரப்பியவர்கள் யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படியும் போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari