ஐ.நா. சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவை கடுமையாக தாக்கி பேசினார்.
வடகொரியா அத்துமீறினால் அந்த நாட்டை முற்றிலும் அழித்துவிடுவோம், வடகொரியா அதிபர் தன்னையும் அழித்து தன் நாட்டையும் அழிக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
இந்நிலையில் அவரது பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக, ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த வடகொரியா வெளியுறவு மந்திரி ரி யாங் கோ, “
ஐ.நா. சபையில் டொனால்டு டிரம்ப் உரை நிகழ்த்தியது நாய் குரைப்பதுபோல் இருந்தது. ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்லும்போது, அங்கிருக்கும் நாய்கள் அதைப் பார்த்துக் குரைக்கும். அதுபோலத்தான் டிரம்பின் பேச்சும் இருந்தது.
அவர் வடகொரியாவை குறைத்து மதிப்பிடுகிறார். அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருப்பது தெரியாது. டிரம்புக்கு உதவியாக இருக்கும் நாடுகளுக்கு நாங்கள் வருத்தத்தைத் தெரிவிப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை” என்று கேலி செய்தார்.