உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி பரபரப்பான வெற்றியைப் பெற்றது. கடைசிப் பந்துக்கு முந்தைய பந்தில், நியூசிலாந்து அணி வெற்றிக்குத் தேவையான ரன்னைப் பெற்றது. நெருக்கடியில் சிக்ஸர் அடித்து எலியாட் அணியை வெற்றி பெறச் செய்தார். முன்னதாக தென்னாப்பிரிக்க அணி 43 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன் பெற்றது. மழை பெய்ததால், ஆட்டம் 43 ஓவராகக் குறைக்கப்பட்டு, நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 43 ஓவருக்கு 298 ரன் என்று நிர்ணயிக்கப் பட்டது. இதை அடுத்து நியூசிலாந்து அணி களம் இறங்கியது. துவக்கம் முதலே நியூசிலாந்து வீரர்கள் அதிரடி காட்டினர். மெக்கலம் 26 பந்தில் 59 ரன் அடித்தார். 4 சிக்ஸர், 8 பவுண்டரி என கலக்கினார். குப்டில் 38 பந்தில் 34 ரன் எடுத்தார். வில்லியம்சன் 6 ரன் எடுத்தார். டெய்லர் 30 ரன் எடுத்தார். ஆண்டர்சன் 57 பந்தில் 58 ரன் எடுத்தார். எலியட் அதிரடி காட்டி, 73 பந்தில் 84 ரன் எடுத்தார். அவர் 3 சிக்ஸ், 7 பவுண்டரிகளூடன் இந்த ரன்னை எடுத்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை எலியட் பெற்றார்.
பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி: இறுதிப் போட்டிக்கு தகுதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week