லண்டன்: வேர்க் கடலைக் கறி சாப்பிட்டு வாடிக்கையாளர் ஒருவருக்கு அலர்ஜி ஏற்பட்டு மரணம் அடைந்ததால், அந்த உணவக உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த உணவகம், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவருடயது. இது இங்கிலாந்தில் முதல் முறையாக போடப்பட்ட வழக்காகக் கருதப் படுகிறது. இந்த உணவக உரிமையாளர், இந்திய உணவகங்களில் மிகச் சிறந்ததாக, இங்கிலாந்தில் விருது பெற்று புகழ் அடைந்தவர். இங்கிலாந்தின் வடக்கு யார்க்சயர் மாநிலத்தின் திர்ச்க் நகரைச் சேர்ந்த 36 வயதான பால் வில்சன் கடந்த 2014 ஜனவரியில் இந்தியர் ஒருவர் நடத்தும் உணவத்தில் இருந்து நிலக்கடலை சேர்த்து சமைக்கப்பட்ட உணவை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்றைக் கலக்கி ஒவ்வாமை ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட உடல் அயற்சியால் குளியல் அறையில் மயங்கி விழுந்து இறந்தார். அவரது இறப்புக்கு முக்கியக் காரணம், அவர் உண்ட உணவுதான் என்று கூறப்பட்டது. அவர் உணவு வாங்கிய இந்தியன் கார்டன் உணவக உரிமையாளர் மொஹமத் காலிக் ஜமான் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில், இங்கிலாந்தில் உணவக உரிமையாளர் ஒருவர் இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் நாளை நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்நாட்டு சட்டப்படி உணவகத்தில் விற்கப் படும் உணவுகளுக்கு, அந்தக் குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டால் ஏற்படக்கூடிய அலர்ஜி குறித்து தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஆனால் இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகே இச்சட்டம் இயற்றப்பட்டது. இங்கிலாந்தில் ஒவ்வோர் ஆண்டும் உணவு ஒவ்வாமையால் 10 பேர் உயிரிழக்கிறார்களாம்.
கடலைக் கறி சாப்பிட்டு வாடிக்கையாளர் மரணம்: உணவக உரிமையாளர் மீது கொலை வழக்கு!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week