Homeஉலகம்சிறுவனைக் கடத்தி பாலியல் பலாத்காரம்! காயங்களுடன் சாலையில் வீசிய கொடூரம்!

சிறுவனைக் கடத்தி பாலியல் பலாத்காரம்! காயங்களுடன் சாலையில் வீசிய கொடூரம்!

boy1 - Dhinasari Tamil

அமெரிக்காவில் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வாகனத்திலிருந்து தூக்கி வீசிச்சென்ற /நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவிலுள்ள மியாமி என்ற பகுதியில் இருக்கும் Brownsville பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் கருப்பு நிறத்திலான ஒரு வாகனத்திலிருந்து ஒரு சிறுவன் கீழே விழுந்துள்ளார். அதன் பின்பு அச்சிறுவன் எழுந்து உடல் முழுவதும் இரத்தக்காயங்களுடன் தெருவில் நடந்து சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற இருவர் அச்சிறுவனுக்கு உதவி செய்ய நினைத்துள்ளனர். அதன் பின்பு உடனடியாக அவசர சிகிச்சை குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்று அச்சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதில் அந்த சிறுவன் ரத்த காயங்களுடன் அந்த வழியாக சென்ற நபர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுகிறார். உடனே ஒரு நபர் சிறுவனுக்கு தண்ணீர் கொடுக்க வருகிறார்.

இப்பரிதாப சம்பவம் தொடர்பில் சிறுவன் குறித்த எந்தவித தகவலும் காவல்துறையினர் வெளியிடவில்லை. எனினும் குற்றத்தில் தொடர்புடைய நபரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அந்த சிறுவனை யாரோ கடத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதன் பிறகு தாக்கி வாகனத்திலிருந்து தூக்கி வீசிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

Follow Dhinasari on Social Media

19,153FansLike
373FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,531FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவாஜி கணேசன் குடும்பத்தில் மற்றுமொரு நடிகர் உதயம்!

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

Latest News : Read Now...

Exit mobile version