ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 920- ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவானது. காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 920- ஆக உயர்ந்துள்ளது. பக்டிகா மாகாணத்தில்தான் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கோஸ்ட், பக்டிகா மாகாணங்களில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலீபான் ஆட்சியை கைப்பற்றிய பிறகு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பலவும் அந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டன. இதனால், மீட்பு பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. பக்டிகா மாகாணங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.