இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார். இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு வியாழக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார். இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முன்பு பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து மகாராணியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இங்கிலாந்து மகாராணி நம் காலத்தின் தலைசிறந்த வீராங்கனையாக நினைவு கூரப்படுவார். அவர் தனது தேசத்திற்கும் மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கினார். பொது வாழ்வில் கண்ணியத்தை வெளிப்படுத்தினார் என பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, அந்த நாட்டின் ராணியாக ஆனவர், அவரது மகள் எலிசபெத். இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகிற அவருக்கு அப்போது வயது 25. அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில், அதன் பின்னர் சர் ஆண்டனி ஈடன் தொடங்கி போரிஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார். தற்போது இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரசை ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார்.
அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத் கண்ட இங்கிலாந்தின் 15-வது பிரதமர் என்ற சிறப்பை லிஸ் டிரஸ் பெறுகிறார். ராணி இரண்டாம் எலிசபெத் பதவிக்காலத்தில் இங்கிலாந்து 3 பெண் பிரதமர்களைக் கண்டிருக்கிறது. அவர்கள், மார்கரெட் தாட்சர், தெரசா மே, லிஸ் டிரஸ் ஆவார்கள். 11 பிரதமர்கள் கன்சர்வேடிவ் கட்சியினர். 4 பேர் மட்டுமே தொழிற்கட்சியை சேர்ந்தவர்கள்.