- Ads -
Home உலகம் சீனா அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதாக தகவல்?அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைப்பா?

சீனா அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதாக தகவல்?அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைப்பா?

சீன அரசை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சிலர் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன அதிபர் ஜ் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனத்திலிருந்து சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ALSO READ:  பாரிஸ் ஒலிம்பிக்: 13ம் நாளில்... நீரஜ் வென்ற வெள்ளி!

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் 80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகனங்கள் பெய்ஜிங்கை நோக்கிச் செல்கின்றன என கூறப்படுகிறது.மேலும் வணிகப் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால், ஜி ஜின்பிங்கின் கைது பற்றிய கதைகள் பெய்ஜிங்கிலும் உலகளாவிய இணையத்திலும் பரவுகின்றன.

சீன அரசை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சிலர் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். சீனாவில் கிட்டத்தட்ட 60% விமானங்கள் எந்த விளக்கமும் இல்லாமல் வெள்ளிக்கிழமை தரையிறக்கப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நியூஸ் ஹைலேண்ட் விஷன் தகவல் படி, மற்றொரு தகவலில் முன்னாள் சீன அதிபர் ஹு ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரதமர் வென் ஜிபாவோ ஆகியோர் சீன அரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி, பெய்ஜிங் நோக்கி ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதாகவும் ஊடகங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணூவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ALSO READ:  IND VS SL ODI 2024: சுழலுக்கு சரிந்த இந்திய பேட்ஸ்மென்கள்

சீனா இராணுவ வாகனங்கள் பெய்ஜிங் நோக்கி செப்டம்பர் 22 நகர்கின்றன. இதற்கிடையில், ஜின்பிங்கை பிஎல்ஏ தலைவர் பதவியில் இருந்து நீக்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியுள்ளது.

Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version