To Read it in other Indian languages…

Home உலகம் உலகில் முதலாவதாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் பிறந்தது 2023 மக்கள் கொண்டாட்டம்..

உலகில் முதலாவதாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் பிறந்தது 2023 மக்கள் கொண்டாட்டம்..

newyear - Dhinasari Tamil
1815207 new year1 - Dhinasari Tamil

உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது- வாணவேடிக்கையுடன் மக்கள் வரவேற்றனர்.

உலகிலேயே சூரியன் முதலாவதாக உதிக்கும் நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்துள்ளது. வாணவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். வெல்லிங்டன்: உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும். இந்நிலையில், நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர். உலகின் முதல் இடமாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. 2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

500x300 1815233 ausie1 - Dhinasari Tamil

ஆஸ்திரேலியாவில் 2023 புத்தாண்டு பிறந்ததால் கொண்டாட்டம் களைகட்டியது.இரவை பகலாக்கிய வான வேடிக்கை நிகழ்ச்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது. சிட்னி நகரில் காண்போரை வியக்க வைக்கும் வகையில் பிரம்மிப்பூட்டும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

உலகம் முழுவதும் 2023 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தற்போது புத்தாண்டு பிறந்துள்ளது. அங்குள்ள சிட்னி நகரில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். இதைக் கண்டு ரசிப்பதற்காகவே உலகம் முழுவதும் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவிற்கு செல்கின்றனர். அந்த வகையில் இன்று சிட்னி நகரில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. அங்கு 2023-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக வண்ண, வண்ண வான வேடிக்கைகளுடன் இரவை பகலாக்கும் வகையில் வானத்தில் ஒளி வெள்ளம் பரவியது. இதில் காண்போரை வியக்க வைக்கும் வகையில் பிரம்மிப்பூட்டும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதனைக் கண்டு ரசித்த மக்கள், தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு 2023-ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.