- Ads -
Home உலகம் தங்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா: பிரதமர் மோடி பாராட்டு!

தங்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா: பிரதமர் மோடி பாராட்டு!

ங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்த வாழ்த்து:

#image_title
Neeraj Chopra

உலக தடகள, ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.17 மீ., தொலைவு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவின் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில், ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.77 மீ., தொலைவு ஈட்டி எறிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான மானு , கிஷோர் ஆகியோரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள்.

இந்நிலையில் இன்று நடந்த இறுதிச் சுற்றில், தனது 2வது முயற்சியில் 88.17 மீ., தொலைவுக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம், இந்தியாவுக்கு உலக தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தி சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் கிஷோர் 5வது இடமும், மானு 6வது இடமும் பிடித்தனர். பாகிஸ்தான் வீரர் நதீம் வெள்ளி வென்றார். செக் குடியரசை சேர்ந்த ஜாகுப் வெண்கலம் வென்றார்.

ALSO READ:  ஜெர்மனியில் ஸ்பெயின் கைப்பற்றிய யூரோ கால்பந்து கோப்பை!

நீரஜ் சோப்ரா உலக தடகளத்தில் இரு பதக்கங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அவர் கடந்த முறை (2022, அமெரிக்கா) வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீரஜ் சோப்ரா இதுவரை, ஒலிம்பிக் (2020), டைமண்ட் லீக் (2022), ஆசிய விளையாட்டு (2018), காமன்வெல்த் (2018), ஆசிய சாம்பியன்ஷிப் (2017), தெற்கு ஆசிய விளையாட்டு (2016) ஆகியவற்றுடன் 2022 உலக தடகளத்தில் வெள்ளி வென்றார்.

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்த வாழ்த்து: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல், விளையாட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஓர் அடையளமாக ஆக்கியுள்ளது.

ALSO READ:  சிவகங்கை: ரிசர்வ் வங்கி 90வது ஆண்டு விநாடி வினா போட்டி அறிவிப்பு!
Dhinasari Reporter

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version