நேபாளம் மாநிலம் காத்மண்டு மாவட்டத்தில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தரவுள்ளார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோயில் அறக்கட்டளை உறுப்பினர் பிரதீப் தாகல் கூறுகையில், பிரதமரின் வருகையையொட்டி இன்று கோவிலில் சிறப்பு பிராத்தனை நடைபெற உள்ளது என்றும், பிரதமரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.