December 6, 2021, 7:48 pm
More

    மே 18- பன்னாட்டு அருங்காட்சியக நாள்

    26 May17 galerie - 1பன்னாட்டு அருங்காட்சியக நாள் (International Museum Day, IMD) ஆண்டுதோறும் மே 18 அல்லது பன்னாட்டு ரீதியாக நடத்தப்படும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வுகள் அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையினால் (International Council of Museums, ICOM) ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. ஒவ்வோரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.

    இந்தாண்டு “ஹைபர் இணைப்புடைய அருங்காட்சியகங்கள்: புதிய அணுகுமுறைகள், புதிய பிரதிகள்” (“Hyperconnected museums: New approaches, new publics) என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.

    அருங்காட்சியக வல்லுனர்கள் பொதுமக்களை சந்திக்கவும், அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்களுக்கு விளக்கவும் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டு வரவும் பன்னாட்டு அருங்காட்சியக நாள் உதவுகிறது.

    1977 ஆம் ஆண்டு முதன் முதலில் கொண்டாடப்பட்ட நாள் தொடக்கம் பன்னாட்டு அருங்காட்சியக நாள் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 2009 ஆம் ஆண்டில், 90 நாடுகளில் இருந்து 20,000 அருங்காட்சியகங்கள் நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தன. 2010 ஆம் ஆண்டில் 98 நாடுகளும், 2011 இல் 100 நாடுகளும், 2012 இல் 129 நாடுகளில் இருந்து 30,000 அருங்காட்சியகங்கள் பங்குபற்றியிருந்தன.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,106FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,802FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-