பன்னாட்டு தமிழர் கூட்டமைப்பு, பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடியா தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்களின் சார்பில் இன்று மற்றும் 20 ஆகிய தேதிகளில் கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு நடக்க உள்ளது.
தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அறிவியல் ரீதியாக ஆவணப்படுத்துதல், கம்போடியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்து, தமிழ் இலக்கியங்களை தென்கிழக்காசிய நாடுகளுக்கு கொண்டு செல்வது, தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்ள இதுவரை ஆயிரக்கணக்கான தமிழர்கள் பதிவு செய்துள்ளனர். உலக அளவிலான தமிழ் பிரதிநிதிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளன.