December 6, 2021, 5:27 am
More

    அமெரிக்கா பள்ளியில் துப்பாக்கி சூடு: 10 பேர் சுட்டுக்கொலை

    01 May19 US 10 killed - 1அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சாண்டா பே பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் நேற்று சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார். இதில் குண்டு பாய்ந்து 9 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர்.

    இது தவிர 10 மாணவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெறித்தனமாக சுட்ட டிமிட்ரியோஸ் பகோர்ட்டிஸ் என்ற மாணவனை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் பள்ளியில் நடக்கும் 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 22 துப்பாக்கிச் சூடுகள் பள்ளிகளில் நடைபெற்றுள்ளன.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,107FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,798FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-