சவுதி அரேபியாவில் புனித பயணம் மேற்கொண்டவர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
மெக்காவில் இருந்து மெதினா சென்ற இந்த பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர், மேலும் காயமடைந்த ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், இவர்கள் ஆசியாவை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.