அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹெச்.டபிள்யு.புஷ், குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 93 வயதான புஷ், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சையை தொடர்வார் என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.டபிள்யு.புஷ் கடந்த மாதம் தனது மனைவி பார்பரா புஷ் இறந்த சில மணி நேரங்களில் வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆண்டு சுவாச பிரச்சனைகள் காரணமக நான்கு மாதங்கள் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். 2015-ல் கழுத்து முதுகு எலும்பு முறிவு சிகிச்சையும், 2012ல் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஒரு வைரஸ் தொற்று சிகிச்சையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது