ஜார்ஜியாவில் cosmetic surgeon என்ற அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சையின் போது வெறித்தனமாக நடனமாடிக்கொண்டே நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 7 நோயாளிகள் இவர் மீது புகார் அளித்ததையடுத்து, படுகொலை குற்றத்தின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாடிக்கொண்டும், வெறித்தனமாக ஆடிக்கொண்டும் இவர் அறுவை சிகிச்சை செய்ததால், சிலரது வயிற்றில் மாறாத்தழும்புகள் மற்றும் சில உடல்நலப்பிரச்சனைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததையடுத்து, இவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இவர் இதனை யூடியூப்பில் வீடியோவாகவும் பதிவேற்றம் செய்துள்ளார்.[videopress gfCks5iS]