ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில், அதிபர் அஷ்ரப் கனியின் போர் நிறுத்த அறிவிப்பை தாலிபன்கள் அமைப்பு ஏற்றுள்ளது.
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. மேலும், ரமலான் மாதம் இஸ்லாமிய மார்கத்தின் புனித மாதமாக கருதப்பட்டு நோன்புகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்தைய 5 நாட்களுக்கு, தாலிபன்கள் உடனான போரை
தற்காலிக நிறுத்தப் போவதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதனை தாலிபன்கள் அமைப்பு ஏற்கும் வகையில் 3 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.