நச்சு வாயு தாக்குதல் நடத்திய ஜப்பான் சாமியாருக்கு மரண தண்டனை

ஜப்பானில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் 1995ஆம் ஆண்டு நச்சு வாயு தாக்குதல் நடத்திய, ஓம் ஷினிக்யோ என்ற வழிபாட்டு குழுவின் தலைவர் ஷோகோ அசஹராவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ‘சரின்’ என்ற நச்சு அமிலத்தை வைத்து டோக்கியோவில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் இக்குழு நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.