உலகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் எடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரை 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உலக மக்கள்தொகை 730 கோடியாக உள்ளது. அது போல் இந்திய மக்கள்தொகை 2016-இன்படி 132. 42 கோடியாக இருந்தது
2018-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி அன்று இந்த எண்ணிக்கை 3 கோடி உயர்ந்து 135 கோடியாகி விட்டது. உலக மக்கள்தொகையும் வரும் 2030 -ஆம் ஆண்டு படி 850 கோடியை எட்டும் என்றும் 2050-ஆம் ஆண்டு 970 கோடியாக உயரும் என்று அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கூறுகிறது.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 33.2 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.74 சதவீதமாகும்.
இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 455 பேர் இருப்பர். 44,99,45,237 மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். உலக மக்கள்தொகையை கட்டுப்படுத்த ஐ.நா. சபையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குடும்ப கட்டுப்பாட்டை தீவிரப்படுத்துதல், மக்களிடம் பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை ஐ.நா சபை செய்து வருகிறது. நாளை மக்கள் தொகை தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவின் மக்கள் தொகை 2 ஆண்டுகளில் 2.5 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.