பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ள இம்ரான் கான், பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து கபில்தேவ், கவாஸ்கர் மற்றும் அமிர்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானில் பாகிஸ்தான் தெக்ரிக் இ- இன்சாப் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், சுனில் கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து மற்றும் பாலிவுட் நடிகர்கள் அமிர்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு இம்ரான் அழைப்பு விடுப்பார் என தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.