இந்தியாவில் பல இடங்களிலும் கிறிஸ்துவத்தைப் பரப்புபவர்கள் இயேசு வருகிறார் என்று எழுதிப் போட்டிருப்பதையும், கண்டபடி காட்டுக் கத்தலில் நரம்பு முறுக்கேற கூச்சலிடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
இத்தகைய வாசகங்களாலேயே ஒரு நபர் பைத்தியம் முத்தி, தான் பெத்த குழந்தையையே குத்திக் கொன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்தது அமெரிக்காவில். கடந்த வாரத்தில்!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வரும் அந்த நபருக்கு 16 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென அக்குழந்தையை இறுக்கி கழுத்தை அறுத்துள்ளார். பின் அக்குழந்தையின் உடலை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று பயந்து அலறிய பக்கத்து வீட்டுக்காரர் கையில் துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது குழந்தையை அதன் தந்தையே கொலை செய்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த்த அந்த நபர், துப்பாக்கியால் அவனது காலில் சுட்டுள்ளார்.
கையில் கத்தியுடன் இருந்த அந்த நபர் மயக்கம் அடைந்து கீழே விழ, உடனடியாக அக்கம் பக்கத்தினர் அந்தக் குழந்தையையும், அதன் தந்தையான 27 வயது நபரையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். ஆனால் அந்தக் குழந்தை கத்தியால் குத்துப் பட்டபோதே இறந்துவிட்டிருப்பதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.
இயேசு வருகிறார் இயேசு வருகிறார் என்று சத்தமாக கத்திக் கொண்டே அந்தக் குழந்தையை அவன் கொன்றதாக பக்கத்து வீட்டுக்காரர் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். இதை அடுத்து குழந்தையைக் கொன்ற அதன் தந்தை கைது செய்யப்பட்டார். அவரது பெயரை போலீஸார் வெளியிடவில்லை! அந்த நபரை சுட்ட பக்கத்து வீட்டுக்காரர் மீது எந்த வழக்கும் போலீஸார் பதிவு செய்யவில்லை!
#FOX4News: Edwardo Carranza shot this video of the arrest of the man, Lewisville Police say, slammed, beat& stabbed to death his 16-month old son yesterday. They will identify him once he’s released from the hospital and booked into jail. pic.twitter.com/Hzpt0o1nwF
— James Rose (@JamesRoseFox4) August 20, 2018