அடுத்த நாட்டு அதிகாரி பர்சை ஆட்டையப் போட்ட பாகிஸ்தான் செயலாளர்?! சிரிப்பாச் சிரிக்குது உலகம்!

இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. பலர் கிண்டலாக கருத்தை பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் டான் பத்திரிகை இந்தச் செய்தியை வெளியிட்டு, உசுப்பு ஏற்றியுள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்த குவைத் நாட்டின் உயர்மட்டக் குழுவில் இடம்பெற்ற அதிகாரியின் பர்சை பாகிஸ்தானைச் சேர்ந்த செயலாளர் ஒருவர் நைஸாக திருடி தன் கோட் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் குவைத் நாட்டைச் சேர்ந்த உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று, பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத் வந்தது. அங்கே பாகிஸ்தான் நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தை முடிந்த சிறிது நேரத்தில், குவைத் குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரி ஒருவரின் பர்ஸ்ஸைக் காணவில்லை என அவர் புகார் கூறினார். இதை அடுத்து, பேச்சுவார்த்தை நடந்த அந்த அறைப் பகுதியில் சல்லடை போட்டு அதிகாரிகளும் பணியாளர்களும் தீவிர தேடுதலில் இறங்கினர். ஆனால் எங்கு தேடியும் பர்ஸ் கிடைக்கவில்லை . இதை அடுத்து அந்தக் கூட்ட அரங்கின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், கூட்டம் முடிந்து அனைவரும் சென்ற நிலையில், பாகிஸ்தான் நிதி அமைச்சக செயலர் அளவில் கிரேட் 20 பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், மேஜையில் இருந்த பர்சை எடுத்து தனது கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நைஸாக நகர்ந்து சென்றது தெரிந்தது. அதை அடுத்து மேற்கொள்ளப் பட்ட விசாரணையில், அது பாகிஸ்தான் முதலீட்டுத் துறை செயலர் ஜரார் ஹைதர் கான் என்பது தெரியவந்தது.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. பலர் கிண்டலாக கருத்தை பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் டான் பத்திரிகை இந்தச் செய்தியை வெளியிட்டு, உசுப்பு ஏற்றியுள்ளது.

அந்தக் காணொளிக் காட்சி: