தவறாமையைக் கடைப்பிடிக்கும் விமான நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

உலகிலேயே நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்கும் விமானம் என்ற பெயரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெற்றுள்ளது. இதுகுறித்து ஷின்ஹூவா செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இலங்கை அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் 91 புள்ளி 37 சதவீதம் நேரம் தவறாமையைக் கடைப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிளைட் ஸ்டேட்ஸ் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியதாகவும், அப்போது ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த 41 விமான நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் உலகிலேயே நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பது தெரியவந்துள்ளது.