ஜெர்மனியில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஹைட்ரஜன் ரயில், செப்டம்பர் 17-ம் தேதியிலிருந்து ஓடத் தொடங்கியிருக்கிறது. காற்று மண்டலத்தை மாசுபடுத்தும் டீசல் ரயில்களுக்கு மாற்றாக, கார்பன் இல்லாத வகையில், சுற்றுச் சூழலுக்கியைந்த வகையில், போக்குவரத்தை உருவாக்கும் முயற்சி இது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அதிவேக டிஜிவி ரயில்களைத் தயாரிக்கும் அல்ஸ்டாம் நிறுவனம்தான் இந்த கொராடியா ஐலிண்ட் ஹைட்ரஜன் ரயில்களையும் உருவாக்கியுள்ளது. 100 கி.மீ. பாதையில் ஓடி வடக்கு ஜெர்மனியில் உள்ள நகரங்களை இந்த நீல நிற ரயில்கள் இணைக்கத் தொடங்கியிருக்கின்றன.
இதற்கு முன்பு இந்தப் பாதையில் டீசல் ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன. “உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வணிக ரீதியாக களத்தில் இறங்கியிருக்கிறது. இன்னும் பல ரயில்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த ரயில்களின் சிறப்பு, இவற்றில் இருந்து கார்பன் வெளியீடு முற்றிலும் இல்லை என்பதே!
இது குறித்து தகவல் தெரிவித்த அல்ஸ்டாம் சிஇஓ ஹென்றி போபார்ட் லபார்க், வரும் 2021ஆம் ஆண்டுக்குள் மேலும் 14 ரயில்களை கீழ்சாக்ஸனி மாநிலத்திற்குத் தர இருக்கிறோம்” என்றார்!
ஜெர்மனியின் பிற மாநிலங்களும் ஹைட்ரஜன் ரயில்களுக்கு மாறப் போவதாக அறிவித்துள்ளன. ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் இணைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எரிபொருள் செல்கள் ஹைட்ரஜன் ரயில்களில் பொருத்தப் பட்டுள்ளன. நீரும் நீராவியும் மட்டுமே இந்த செல்களிலிருந்து வெளியேறும். இயங்குவதற்கு தேவையான சக்தி போக மீதமுள்ள உபரி சக்தி, அயான் லித்தியம் பேட்டரிகளில் சேமித்து வைக்கப்படும்.
ஒரு டப் ஹைட்ரஜனைக் கொண்டு சுமார் 1000 கி.மீ. வரை இந்த கொராடியா ஐல்ண்ட் ரயில்கள் ஓடும். டீசல் ரயில்களின் ஆற்றலும் ஏறக்குறைய இதே அளவுதான்.
காற்று மண்டல மாசுபடுதலை தவிர்க்க ஜெர்மானிய நகரங்கள் பலவும் இப்போது திணறிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் ஹைட்ரஜன் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதை மக்கள் வரவேற்கின்றனர்.
ஹைட்ரஜன் ரயில் எஞ்சினின் விலை டீசல் எஞ்சினின் விலையைவிட அதிகம்! ஆயினும் ரயிலை ஓடவைத்து பராமரிக்கும் செலவு டீசல் எஞ்சினை விடக் குறைவுதான்!
alstom is German company only not france