ஒபாமாவிற்கு பார்சலில் வெடிகுண்டு அனுப்பிய நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டனுக்கு பார்சலில் வெடிகுண்டு அனுப்பிய அதிபர் டிரம்பின் அதி தீவிர ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரானவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியதாக, சீஸர் சாயோக்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த அளவுக்கு தேவையற்ற பரபரப்புக்கு ஊடகங்கள் மிக முக்கியப் பங்கு வகித்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
புளோரிடாவைச் சேர்ந்த 56 வயதாகும் சீசர் சயோக், இந்த வாரத்தில், ஈ மெயில் வழியாக வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப் பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை நேற்று அறிவிக்கப் பட்டது.