வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் ‘தாமத’ தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடினார்.
கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் மாளிகையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்தக் கொண்டாட்டத்தில், இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகிறார்கள். குறிப்பாக, சீக்கிய ஜைன சமூகத்தவரும் பங்கேற்று அதிபர் மாளிகை தீபாவளி கொண்டாதில் பங்கேற்று வருகிறார்கள்.
2004 தொடங்கி, ஒபாமா, ட்ரம்ப் வரையில் தொடர்ந்து தீபாவளி குறிப்பிட்ட தினத்தில் கொண்டாட்டப் பட்டு வந்த போதும், இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டத்துக்காக திட்டமிட்டிருந்த தீபாவளி நாளில், அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற்றன. அதில் மிகவும் பரபரப்பாக இருந்ததால், குறிப்பிட்ட நாளில் அதிபரால் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. இதனால் பின்னர் கொண்டாடப் படும் என்று ஒத்திவைக்கப் பட்டது.
இந்நிலையில், நேற்று அதிபர் டிரம்ப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். அப்போது பேசிய அவர், “இந்தியர்கள் கடினமான உழைப்பாளிகள், இந்தியாவைச் சேர்ந்த பல லட்சம் கடின உழைப்பாளிகளுக்கு தாயகம் அமெரிக்காதான் என்று கூறினாஅர்.
பின்னர், இது குறித்து தனது டுவிட்டர் பதிவிலும், டிரம்ப் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அதில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இங்கே கூடி உள்ளோம். இந்து மக்கள் கொண்டாடும் தீபங்களின் விழாவான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவது எனக்கு மிகுந்த கௌரவம் என்று கூறியிருந்தார்.
It was my great honor to host a celebration of Diwali, the Hindu Festival of Lights, in the Roosevelt Room at the @WhiteHouse this afternoon. Very, very special people! https://t.co/kQk7IvpSFo pic.twitter.com/tYlBABg4JF
— Donald J. Trump (@realDonaldTrump) November 13, 2018
President Donald Trump Tuesday said United States’ relationship with India can act as a “bulwark” for freedom, prosperity and peace as he celebrated Diwali in the White House along with eminent Indian-Americans. It is the second consecutive year that President Trump has celebrated the largest festival of India. Trump said he was thrilled to celebrate Diwali at the White House. He said the United States has deep ties with India and he was grateful for his friendship with Prime Minister Narendra Modi. Watch this video for more details.