ராஜபட்ச பிறந்த நாள்… கோலாகலமாய் கொண்டாடிய சிறீசேன…! களைகட்டும் இலங்கைக் கூத்து!

இலங்கையில் நடைபெற்ற இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும் ராஜபட்ச பிறந்தநாள் கோலாகலமாய் நடந்தேறியது. அதுவும் அதிபரின் இல்லத்தில்!

இலங்கையில் நிகழும் இவ்வளவு குழப்பங்களுக்காக மக்கள் கவலைப்படும் நேரத்தில் ராஜபட்ச நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதுவும் அதிபர் மைத்ரீபால சிறீசேன இல்லத்தில் வைத்து தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேனவும் இதில் கலந்து கொண்டு, உற்சாகமாக போஸ் கொடுத்தார். இந்தப் புகைப்படங்கள் இப்போது இணைய வெளியில் உலா வந்து பலரது விமர்சனத்தையும் பெற்று வருகிறது.