இலங்கை வழியே இந்தியாவை குறிவைக்கும் ஐஎஸ்ஐஎஸ்.,! என்ன செய்யப் போகிறது மத்திய அரசு!?

இந்தியாவை இலங்கையில் இருந்து குறி வைக்கிறது ஐஎஸ்ஐஎஸ்., அமைப்பு என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன!

இந்தியாவின் தென்முனையும், கூடங்குளம் அணு உலையை தேவைப்படும் நேரத்தில் தாக்குவதற்கும், இலங்கையின் வடக்கிலுள்ள மன்னாரையும், ஸ்ரீஹரிகோட்டா, விசாகப்பட்டினம் போன்ற மையங்களை கடல் வழியாகத் தாக்குவதற்குமான பின்தளங்களை உருவாக்க இலங்கையின் வடகிழக்கிலுள்ள முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை இஸ்லாமிய மயமாக்குவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, இந்தியாவின் ராமநாதபுரம் கடற்கரைப் பகுதி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரப் பகுதிகளை இஸ்லாமிய மயமாக்கி, பாகிஸ்தான் சதிவலை பின்னி வரும் சூழலில், இலங்கையையும் தனது தளமாக பயன்படுத்தி வருவது கண்கூடாகத் தெரிந்துள்ளது.

தான் நேரடியாக ஈடுபட்டால் இந்தியா எச்சரிக்கை அடைந்து விடும் என்பதால், மத்தியக் கிழக்கு நாடுகளின் வழியே குடியேற்றத் திட்டங்களை நடத்தி வருகிறது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

இதற்காக, விடுதலைப் புலிகள் இல்லாத இந்தக் கட்டத்தில், இஸ்லாமிய மயமாக்கத்தை இலங்கையில் பரவலாக்கி வருகிறது பாகிஸ்தான். அதன்பேரில், புத்த விகாரங்களை உடைப்பது,. இந்துக் கோயில்களை நாசப்படுத்துவது, மிரட்டி மதம் மாற்றுவது உள்ளிட்ட்ட செயல்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் இலங்கையில் அவ்வாறு ஒரு கும்பல் வெடிபொருள்களுடன் பிடிபட்டுள்ளது.

புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட 4 பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர்
அண்மையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் தென்னந்தோப்பு ஒன்றில் மறைந்திருப்பதாக குற்ற புலனாய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சிறப்பு அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன் கடந்த வியாழக்கிழமை அவர்களை சுற்றி வளைத்தனர்! அந்த இடத்திலிருந்து 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட நான்கு சந்தேகப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டனர்! அவர்கள் தங்கியிருந்த இடத்தைத் தொடர்ந்து சோதித்தபோது புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

100 கிலோ வெடிபொருள்கள் அடங்கிய 3 பேரல்கள், நைட்ரிக் அமிலம் அடங்கிய ஆறு பேரல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

99 டெட்டனேட்டர்களும், ஒரு வேட்டை துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டக்கள் ஏழும், நவீன கேமரா ஒன்றும் மடிக்கணினி ஒன்றும், தமிழ் மற்றும் அரபு மொழியில் அச்சிடப்பட்ட புத்தகங்கள், விசா அனுமதி சீட்டு உள்ளிட்ட பல பொருட்களும் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நால்வரில் தென்னந்தோப்பு உரிமையாளரின் மகன் அடங்குவார் என்று போலீசார் கூறியுள்ளனர். கண்டு பிடிக்கப்பட்டவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன் பாதுகாப்பு அமைச்சர்கள் ஆலோசனைக்கு ஏற்ப 90 நாள்கள் அவரக்ளை காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது; கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...