மலேசியாவில் ஹிந்து மதத்தை ஃபேஸ்புக்கில் இழிவாக சித்திரித்து கருத்துகளை பதிவு செய்த 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர்
மலேசிய போலீஸ் ஐஜி முஹம்மத் பூசி ஹாருண் இது குறித்து தெரிவித்த போது, ஃபேஸ்புக்கில் ஸாம்ரி பின் அப்த் ரசாக் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று ரிமாண்ட் செய்யப்படுகிறார். இவர் தண்டனைப் பிரிவு 298ஏ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது மதங்கள் மற்றும் சமுதாய குழுக்களுக்கிடையே வேற்றுமையை பரப்புவதும் சமூகத்தை பிளவுபடுத்துவதன் கீழான சட்டப் பிரிவு! இதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என்ற வகையில் இவர் மீது வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது என்று கூறினார் ஐஜி.,

அவர் மேலும் குறிப்பிட்டபோது சமூக ஊடகங்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும்! நீங்கள் பதிவு செய்யும் அனைத்தும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் நாட்டின் நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

நேற்று கோலாலம்பூரில் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட வேலைஇல்லாத இளைஞர் ஒருவர் 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப் பட்டார் என்றும் 10000 மலேசியன் ரிங்கிட் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது என்றும் கட்டத் தவறினால் மேலும் இரண்டு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தண்டனை அளிக்கப்பட்டது! இவர் கடந்த மாதம் ஃபேஸ்புக்கில் இஸ்லாம் குறித்தும் முஹம்மது நபி குறித்தும் தவறாக சித்திரித்து இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது

கடந்த வெள்ளிக்கிழமை ஒருவருக்கு 10 வருடம் 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் ஃபேஸ்புக்கில் முகமது நபி குறித்து தவறாக சித்திரித்திருந்தார்! தற்போது இந்து மதம் குறித்து இழிவாக ஒருவர் சித்திரித்திருப்பதாக கூறப்பட்டு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...