நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலியானவர்களில் 5 பேர் இந்தியர்கள் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் 9 இந்தியர்களைக் காணவில்லை என்று இந்திய தூதரகம் நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், அவர்களில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த விவரத்தை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

காணாமல் போனவர்கள் குறித்து தெரிவித்துள்ள இந்திய தூதரகம் அவர்களது நிலை குறித்து தெரிவிக்குமாறு நியூஸி., அரசிடம் கோரிக்கை விடுத்தது. மேலும், அவர்களின் குடும்பத்தினருடனும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் மசூதிக்குச் செல்லும் முன்னர் தங்கள் குடும்பத்தினரிடம் பேசியதாகவும் பின்னர் அவர்களிடம் இருந்து தொடர்பு எதுவுமில்லை என்றும் அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தோரில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஃப் வோரா மற்றும் அவரது மகன் ரமீஸ் வேரா ஆகியோர் பெயர்கள் இருந்தன.

கேரள மாநிலம் கொடுங்கலூர் பகுதியைச் சேர்ந்த ஆன்சி அலி பாவா என்ற 27 வயதான இளம் பெண்ணும் மசூதியில் தமது கணவருடன் தொழுகை நடத்தச் சென்றபோது உயிரிழந்தார். ஆயினும் அவர் கணவர் உயிர் தப்பிவிட்டார் என கூறப்படுகிறது.

மெஹபூப் கோகார், ஒஸைர் காதிர் என மேலும் இருவர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.

முன்னதாக, தெலங்கானா கரீம் நகரைச் சேர்ந்த முகமது இம்ரான் கான் என்பவரும் உயிரிழந்து விட்டதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த 31 வயதான ஃபஹராஜ் ஹசன் என்பவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹபீஸ் முசா படேல், நவஸ்ரீயைச் சேர்ந்த மற்றொரு வம்சாவளி இந்தியர் ஆகிய நான்கு பேர் உயிரிழந்ததாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்து தகவல் அறிந்து கொள்ள உதவிக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அது குறித்த விவரம்..

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...