உலக ஆட்டிசன் விழிப்புணர்வு தினம் (World Autism Awareness Day); ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. மதியிறுக்கம் என்பது, பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதியிறுக்கம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது
ஆட்டிசம் என்பது மருத்துவ உலகின் ஒரு வளர்ச்சி குறைபாடு.இக்குறைபாடு 1943ம் ஆண்டு கண்டறியபட்டாலும் கடந்த 10 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி அதிகமாக உள்ளது. சராசரியாக 350குழந்தைகளில் ஒருவருக்கு இக்குறைபாடு உள்ளது.குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு அதிகளவில் இப்பதிப்பு உள்ளது.இதில் பத்து ஆண் குழந்தைகளுக்கு ஒரு பெண் குழந்தை என்ற விகிதத்தில் ஆட்டிசம் பாதிப்புள்ளது.
இக் குழந்தைகள் பேசுவதற்கு உரிய பருவம் வந்த பின்னும் பேசாமல் இருப்பார்கள்.மேலும்,யாருடனும் சேர்ந்து விளையாடாமல் தனிமையில் இருப்பது,டிவி அதிகமாக பார்ப்பது உட்பட பல்வேறு குறைபாடுகளுடன் கனபடுவர். இந்த குறைபாடுடைய குழந்தைகளை நாம் வீட்டிற்கு அருகிலும்,நாம் உறவினர் மத்தியிலும் பார்த்திருக்கலாம்.சில குழந்தைகள் நாலு வயது வரை கூட பேசாமல் இருப்பார்கள்.முகம் பார்த்து பேசமாட்டார்கள்.திட்டினால் கூட கோபம் வராது.பசித்தால் பசிக்கிறது என சொல்ல தெரியாது.
இவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இல்லை.எதையும் மெதுவாக கற்றுகொள்ளுபவர்கள்.மற்ற குழந்தைகளிடம் இல்லாத தனி சிறப்பு.இவர்களிடம் இருக்கும்.இதை பெற்றோர்கள் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்