டிவிட்டர், பேஸ்புக், யுடியூப்… இவற்றில் எல்லாம், அப்பாவி பயனர்களுக்கு ஒரு நீதி,  இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஒரு நீதி என்று குமுறுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

இதை நம்மால் அனுமானிக்க முடியுமா? யோசித்துப் பார்க்க முடியுமா? நாம் யூடியூபில் ட்விட்டரிலோ பேஸ்புக்கிலோ இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து ஏதாவது கருத்துக்களை வெளியிட்டால் உடனே நாம் பிளாக் செய்யப்படுவோம்! அதற்கு பின்னணியில் நிறைய பேர் இயங்குகிறார்கள்!

ஆனால் இந்த நபர் இலங்கையின் எத்தனையோ அப்பாவிகளை படுகொலை செய்ய காரணமான நபர்! இருப்பினும் இப்போதும் யாராலும் தொட முடியாத அளவுக்கு சமூக வலைத்தளத்தில் இவரது கருத்துக்கள் இருக்கின்றன! எந்த மாதிரியான உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற கேள்விக் கணைகளை பலரும் முன்வைக்கின்றனர்!

இதே போன்ற கேள்வியை பிராஸ்வா கோதியே தனது சமூக வலைதளப் பக்கத்தில் முன்வைத்துள்ளார்!

இலங்கை கொழும்புவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்லாமிய மத போதகர் ஸஹ்ரான் ஹாஷிம் என்பவர் இருந்துள்ளார் என்றும் அவருடைய பேச்சால் கவரப்பட்ட பலரை தன் இயக்கத்தில் சேர்த்து இத்தகைய கொடூர தாக்குதல்களை அவர் நிகழ்த்தியுள்ளார் என்றும் அரசாங்கம் கூறுகிறது!

இந்நிலையில் youtube இல் இவரது வீடியோக்கள் பல பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்தின் பக்கத்தில் இழுத்துச் செல்லும் இவருடைய பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள் இப்போதும் யூடியூபில் அதிகம் உலா வருகின்றன

மற்ற எந்தவித புகார்களுக்கும் உடனடியாக பதில் அளிக்கும் வகையில் மற்றவர்களின் வீடியோக்கள் பதிவுகள் தகவல்களை தடைசெய்யும் யூடியூப் ஃபேஸ்புக் ட்விட்டர் போன்றவை, ஸஹ்ரான் ஹாஷிம் கணக்கில் கை வைக்கவில்லை என்பது ஆச்சரியமானதுதான்!

வன்முறை அரசியலை, வன்முறை மத அடிப்படைவாதத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் இவருடைய பயங்கரவாத கருத்துக்களை சமூக வலைதளங்கள் கொஞ்சமும் கவனிக்கவில்லை என்பது, இந்த உலகின் மோசமான போக்குக்கு சமூக வலைத்தளங்களின் பங்கும் இருப்பதை உணர்த்துகிறது என்கிறார் வலைத்தளவாசிகள்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...