மோடி ஆட்சி போனால்… நான் இந்தியாவுக்கு திரும்புவேன்: இந்து வெறுப்பு மதபோதகர் ஜாஹிர் நாயக்!

பாஜக., ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசை எதிர்த்துப் பேசினால், நீதி கிடைக்க 80 சத வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது, 10-20 சத வாய்ப்புதான் கிடைக்கிறது என்று கூறியுள்ளார் ஜாஹிர் நாயக்.

 

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்தியாவுக்கு திரும்பத் தயாராக உள்ளேன் என்று, இந்து மத வெறுப்பை முன்னிலைப் படுத்தும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் அறிவித்துள்ளார். மோடி அரசை விட காங்கிரஸ் அரசு குறைந்த தீமையை செய்யக் கூடியது என்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்றவர் ஜாகிர் நாயக்! இவர் பின்னர் மலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்று அங்கேயே தங்கிவிட்டார். ஜாகிர் நாயக்குக்கு எதிராக மலேசியாவில் தமிழர்கள், இந்தியர்கள் என சிலர் ஆர்ப்பாட்டங்களைச் செய்து, அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், ஜாஹிர் நாயக், ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஆட்சி மாற்றம் ஏற்படும். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், தம்மை கைது செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் இந்தியாவுக்குத் திரும்புவதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை என்று கூறினார்.

மேலும், காங்கிரஸும் தீமை செய்யும் பிசாசுதான். ஆனால் இரு பிசாசுகளில் காங்கிரஸ் குறைந்த தீமை செய்யும் பிசாசு என்று குறிப்பிட்ட ஜாஹிர் நாயக், காங்கிரஸ், பாஜக.,வை விட அதிக ஹிந்துத் தன்மை கொண்டது என்று சாடினார்.

பாஜக., ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசை எதிர்த்துப் பேசினால், நீதி கிடைக்க 80 சத வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது, 10-20 சத வாய்ப்புதான் கிடைக்கிறது என்று கூறியுள்ளார் ஜாஹிர் நாயக்.

ஜாஹிர் நாயக்கின் வெளிநாட்டு நிதி மோசடி குறித்து அமலாக்கத்துறை கடந்த 2016ஆம் ஆண்டில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. சமூகத்தில் பிளவை உண்டாக்கும் வெறுப்புப் பேச்சுகளை போதனை செய்ததுடன், ரூ.193 கோடிக்கு ஜாஹிர் நாயக் முறைகேடு செய்ததை அம்பலப் படுத்தியது. மேலும், ரூ.50.5 கோடி மதிப்பில் சென்னையில் இஸ்லாமிக் இண்டர்நேஷனல் ஸ்கூல் சொத்துகள், 10 பிளாட்கள், 3 குடோன்கள், 3 கட்டடங்கள், புனேயில் உள்ள நிலம், மும்பை நிலம், 10 வங்கி கணக்குகள் என அனைத்தையும் அமலாக்கத்துறை வெளிக் கொண்டு வந்தது.

இதனிடையே, ஜாகிர் நாயக்கை மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் புகழ்ந்ததை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். ஜாகிர் நாயக்கின் பேச்சுகளால் தூண்டப்பட்டு டாக்காவில் தாக்குதல் நடத்தியதாக பயங்கரவாதிகள் வாக்குமூலம் அளித்ததை சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளுக்கு நண்பனாக விளங்குவதாக சாடினார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...