நோன்பு சமயத்தில் உணவருந்திய 80 பேர் கைது….!

iநைஜீரியாவில் நோன்பு சமயத்தில் உணவருந்திய 80 பேர் கைது....!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியா்களின் புனித கடமைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்த நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியா்கள் பகல் நேரம் முழுவதும் உண்ணா நிலையை கடைபிடித்து மாலை 6.30 மணிக்கு மேல் உணவு உண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர்.

நாட்டின் வடபகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று.வருகிறது.

மேலும் ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களை மீறிய வகையில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க ‘ஹிஸ்பா’ எனப்படும் போலீஸ் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மாலைவரை காவலில் வைத்து, எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...