- Ads -
Home உரத்த சிந்தனை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறதா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறதா?

modi krushi meet

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயக்கம் காட்டுகிறதா பிஜேபி அரசு? நீதியை அவமானம் செய்வதாக இல்லையா இது? மத்திய ஆளும் அரசே இந்த விதம் நடந்து கொள்வது என்ன சரி? {கேள்வி : மகேஷ் , கோகுல் இன்னும் பலர்}

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் அதனை நடைமுறை படுத்துவது தான் சரி. நான் எப்போதும் கூறுவது இதுவே நீதிமன்றம் ஒரு தீர்ப்பை ஆய்வு செய்து வழங்கிய பின் அதனை அமல்படுத்துவதும் , நடைமுறை படுத்துவதும் அதனை மதித்து நடந்து கொள்வதும் தான் எந்த ஒரு நாட்டிற்கும் நல்லது. அதுவே அந்த நாட்டின் இறையாமையை காக்கும். அது யார் ஆட்சி செய்தாலும் சரி இதுவே என் கருத்து.

ஆனால் இது கவலைக்கிடமாக இரு மாநில அரசியலில் சிக்கி – முழுக்க அரசியல் காரணத்தால் மட்டுமே இந்த தீர்ப்பு பல ஆண்டுகளாக அமல்படுத்தாமல் தள்ளி செல்வது மிக பெரிய வருத்தம் அளிக்கிறது. அதே நேரம் இதனை உணர்வு பூர்வமான தூண்டிவிட துடிக்கும் பலருக்கு ஆதாயகளமாக மாறுவதை நான் காண்கிறேன்.

காவிரி இல்லை என்றால் மாநிலமே நாசம் போச்சு என்று இந்த சினிமா இசையமைப்பாளர் ஒருவர் மக்களை தூண்டிவிடுவதை அறிந்தேன். இது போல தூண்டிவிடும் செய்திகளை மக்கள் நம்பவேண்டாம். ஏன் என்றால் அவர்கள் கூறுவதில் உண்மை கிடையாது. பொறுமையாக முழுவதும் படிக்கவும்.

விவசாயம் சார்ந்து பொதுவாக நம் தமிழகம் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் அனைவரும். சில விவரங்கள் இங்கே.

-தமிழகத்தின் மொத்த விவசாய நிலபரப்பு 63 லட்சம் ஹெக்டேர் ( Net irrigation 27.09 லட்சம் ஹெக்டேர்). இதில் 55.7% நிலபரப்பு முழுக்க முழுக்க நிலத்தடி நீர் சார்ந்த விவசாயம். அதாவது Tube wells விவசாய பம்புசெட் போன்றவை,Open wells கிணறுகள் போன்றவை இவற்றின் மூலம் கிடைக்கும் நீர் ஆதாரம் கொண்டு தமிழக விவசாயிகள் செய்யும் விவசாய அளவு 55.7% ஆகும். இது தவிர 17.6% விவசாயம் TANKS கூட இந்த வகையில் என்பதால் சுமார் 73%(நிலத்தடி நீர் + நேரடி மழை) விவசாய நிலங்கள் முழுக்க முழுக்க காலத்திற்கு மழையை நம்பிய விவசாயம். இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். {ஏறக்குறைய இந்தியா முழுவதும் 4ல் மூன்று பங்கு விவசாயம் என்பது மழையை எதிர்பார்த்து நடக்கும் விவசாயம் தான் என்பதை அனைவரும் தயவு கூர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.}

-தமிழகத்தில் ஓடும் பெரும் ஆறுகள் மூலம் செய்யபடும் விவசாயம் என்பது சுமார் 26.4% ஆகும். தமிழகத்தின் நிலத்தடி நீர் ஆதாரம் என்றால் சுமார் 811TMC , மீதம் இருப்பவை 853TMC.

-இதில் காவிரி டெல்டா பகுதியான 14.47 லட்சம் ஹெக்டேர் நிலபரப்பு விவசாயம் ஏற்ற பகுதிகள் ஆகும். அதாவது 11.13%(Net irrigation 26% ஆகும்) தமிழக விவசாயம் இந்த காவிரி மாவட்டங்களான தஞ்சாவூர் , திருவாரூர் ,நாகபட்டினம் ,திருச்சி ,அரியலூர் ,கூடலூர் , புதுகோட்டை என்ற மாவட்டங்கள் சார்ந்து நடைபெறுகிறது.{ இந்த பகுதியில் இருக்கும் 60% workforce இந்த விவசாயம் சார்ந்து இருக்கிறது என்பது ஒரு கவனிக்கவேண்டிய விஷயம்}. மிக எளிமையாக கூறினால் தமிழகத்தின் 26% உணவு உற்பத்தி இந்த மாவட்டங்கள் சார்ந்து இருக்கிறது.

-இந்த 11.13% விவசாய பரப்பும் முழுவதும் காவிரி ஆற்றின் நீர் ஆதாரத்தை நம்பியவை அல்ல. இந்த பகுதியின் மழை நீர் சாந்த விவசாயமே அதிகம் – அதன் அளவு வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை மூலம் கிடைக்கும் சராசரி ஆளவு 956 mm-1350mm மழைநீர்.

-இங்கே நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டியது மொத்த காவிரி தண்ணீரில் 404.25 TMC, கர்நாடகத்திற்கு 284.75 TMC, கேரளா 30TMC , புதுச்சேரி 7TMC. அதில் நம் மாநிலத்தில் உற்பத்தியாகும் கிளை நதிகள் தவீர்த்து விட்டு பார்த்தால் நமக்கு கர்நாடகம் கொடுக்கவேண்டிய தண்ணீர் அளவு – 177.25TMC. இதுவும் மழை அளவு ககுறையும் போது பகீர்மானம் அதன் விகிதாசார அடிப்படையில் பகிர்ந்து கொள்ள தான் நமக்கு இப்போ காவிரி மேலாண்மை வாரியம் தேவையாகிறது.

-கூடுதலாக நமக்கு கிடைக்கும் இந்த 177.25TMC தண்ணீர் அளவை முறையாக வழங்காதது தான் இப்போ பிரச்சனை. ஒவ்வொரு ஆண்டும் எதோ ஒரு வகையில் பருவ மழை குறையும் போது இரண்டு மாநிலங்களும் பிரச்சனை எழுகிறது. பருவமழை குறையும் பொது அதற்கு ஏற்ப தண்ணீர் இருக்கவேண்டும். அதாவது 177 ஒவ்வொரு ஆண்டும் கட்டாயம் தரவேண்டும் என்பது கிடையாது என்ற கர்நாடக வாதம் சரி என்றாலும் – அந்த விகிதாசாரத்தின் படியாது தண்ணீர் கிடைகிறதா என்றா அதிலும் ஏமாற்றமே. அதன் மூலம் சுமார் 2முதல் 3% அளவிற்கு விவசாய நிலம் பாதிக்கபடுகிறது என்பது உண்மை. இப்படி இருக்க நாடே நாசம் என்று கூச்சல் போடுவது உணர்வை தூண்டிவிடும் வேலை தான் ஒழிய வேறு இல்லை.

ஆனால் இந்த சினிமா இசையமைப்பாளர் , சில பிரிவினை வாதிகள் கூறுவது போல தமிழகமே நாசம் என்ற கூப்பாடு உண்மை கிடையாது. குறிப்பிட்ட அளவு விவசாயம் பாதிக்கும் என்பது உண்மை. அதை கேட்கும் முழு உரிமை மாநில மக்களுக்கு உண்டு. அதற்காக இது தான் சந்தர்ப்பம் என்று உண்மையை திரித்து பெரிதாக்கி இந்திய தேசிய கோடியை எரிக்கவும் , தேசபிரிவினைக்கு விதை போடும் கூட்டம் நோக்கம் காவிரி தண்ணீர் அல்ல மாறாக இது தான் சந்தர்ப்பம் மக்களை நாட்டுக்கு எதிராக தூண்ட வேண்டும் என்ற எண்ணம் தான் ஒழிய வேறு இல்லை.

இந்த விவகாரத்தில் மோடி அமைதியாக இருக்கிறார் என்ற குற்றசாட்டு??? திமுக குற்றசாட்டு எப்படி பார்ப்பது?

இதில் மோடி மட்டும் அல்ல ராகுல் காந்தியும் கூட அமைதியாக தான் இருக்கிறார். கர்நாடக மாநில அரசு அனுமதித்தால் நீர் கிடைக்கபோகிறது. திமுக ராகுல் காந்தியை பேச சொலல்வேண்டியது தானே. அட திமுக அசைக்க முடியாத சக்தியாக இருந்த காலத்தில் என்ன செய்தார்கள்????

டெலிகாம் , கப்பல் துறை என்று நல்ல வளமான துறைகளை கேட்டு வாங்கிய திமுக நீர்வளத்துறையை வாங்கி பிரச்சனையை என்றோ தீர்த்திருக்கலாமே???? எனவே திமுக என்ற கட்சி 100% நாடகம் நடத்துகிறது இந்த விசயத்தில். எனவே ராகுல் , மோடி இருவருமே இந்த விவகாரத்தில் எந்த சார்பும் இல்லாமல் நிற்க காரணம் ஆதாயம் என்பதை தாண்டி இது மோசமான அரசியலாக்கபட்டுவிட்டது தான். இங்கே திமுக அதிமுக கம்யூனிஸ்ட் எல்லோருமே அரசியல் பார்வையில் தான் விஷயத்தை கொண்டு செல்ல விரும்புகிறார்கள்.

என்னை பொறுத்தவரை மோடி , ராகுல் இருவருமே இந்த விவகாரத்தில் ஒரு சூழ்நிலை கைதி போல் தான் இருக்கிறார்கள். இந்த இரண்டு மாநில அரசியல்வாதிகளும் இதை தீவிரமாக தங்கள் அரசியல் லாபத்திற்கு உணர்வு பூர்வமாக எடுத்து செல்வதால் இந்த நிலை நீடிக்கிறது. இதில் தமிழகம் பாதிப்புக்கு உள்ளாக காரணம் முழுக்க முழுக்க இங்கே காங்கிரஸ் பிஜேபி இருவருக்கும் எந்த வாக்கு வங்கியும் இல்லை.

அதே நேரம் கர்நாடகா , கேரளாவில் அவர்களுக்கு அரசியல் வெற்றிக்கு மக்கள் ஆதரவு உண்டு. எப்படி பார்த்தாலும் திராவிட கட்சிகள் சும்மா குறை சொல்லிடே திரியும் தவிர இரண்டு பெரிய திராவிட கட்சியும் மத்திய அரசுடன் சேர்ந்து தான் இயங்கும் என்னும் போது எதற்காக திராவிட கட்சிகளை நாம் தேர்வு செய்யவேண்டும்??? எனக்கு அந்த விசயத்தில் கேரளா , கர்நாடக மக்களிடம் உள்ள தெளிவு நம்மிடம் இல்லை என்று தோன்றுகிறது. எப்படியும் மத்திய அரசை தான் சொல்லு போறான் இரண்டு திராவிட கட்சியும் – அப்படி இருக்க திராவிட கட்சி எதுக்கு நமக்கு? அரசியல் ரீதியாக கர்நாடக மக்களும் தெளிவாக முடிவு செய்கிறார்கள்.

இது போல சூழல்களில் நாட்டில் இருகட்சி ஆட்சி முறை நல்லது என்று படுகிறது… காவிரி மட்டும் அல்ல அனைத்து பிரச்சனைக்கும் என்றாவது திராவிட கட்சி பொறுப்பேற்றது உண்டா? எல்லாத்தையும் மத்திய அரசு என்று கைகாட்டிவிட்டு – பின்னர் அவர்களுடனே கூட்டு சேர்ந்து மக்களை முட்டாள் ஆக்க எதற்கு இந்த திராவிட கட்சிகள்??? எனக்கு அது தான் புரிவது இல்லை. மோடிக்கு ஆதரவு இங்கே இல்லை. நீங்கள் ஆதரவு கொடுத்தவனுக்கு வாங்கி தர வக்கு இல்லை. அந்த வகையில் தங்கள் பிரச்சனையை யார் தீர்ப்பார் என்ற தெளிவு கேரளா கர்நாடக மாநிலத்தவருக்கு இருக்கிறது.

இறுதியாக : நிரந்தர தீர்வு தான் என்ன?? (நான் அடிக்கடி கூறும் தகவில் இதுவே}

நீங்கள் சவுதி அரபியவுக்கு அனுப்பும் அரிசியின் அளவை விவசாயம் செய்ய எவ்வளவு தண்ணீர் தேவைத் தெரியுமா??? 96,69,31,000கிலோ அரிசியை விவசாயம் செய்து உருவாக்க சுமார் நீங்கள் கிலோவுக்கு 3000லிட்டர் தண்ணீர் என்று சராசரி அளவை எடுத்துப் பார்த்தாலும் சுமார் 29007930000000லிட்டர் தண்ணீர் தேவை ஆகும்.மீண்டும் கூறுகிறேன் நீங்கள் விவசாயம் செய்கிறேன் என்ற பேர்வழியில் ஒரு கண்மூடித்தனமான விவசாயத்தால் உங்களுக்கு பெரும் ஆதாரமாக விளங்கும் தண்ணீரை ஏற்றுமதி செய்கிறீர். அதுவும் ஆண்டுக்கு 2900793,00,00,000லிட்டர் தண்ணீர் ஒரு நாட்டுக்கு.

(கொக்கோகோலா காரன் தண்ணீர் எடுத்து உங்கள் மாநிலத்தில் தான் விற்க முடியும். ஆனால் விவசாயம் என்ற பெயரில் நீர் ஏற்றுமதி செய்கிறார்களே இது எந்த வகையில் நியாயம்?)

{ஒரு தனி நபரின் ஆண்டு தண்ணீர் தேவை 54,750 லிட்டர். சராசரியாக ஒரு 5பேர் கொண்ட குடும்பத்தின் ஆயுள் காலத்தேவையே 1,64,25,000லிட்டர் தண்ணீர் தான். இது புரிகிறதா? அப்படி என்றால் 1,76,600குடும்பங்களின் ஆயுள் காலத்தேவைக்கான நீரை ஒரே ஆண்டில் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்கிறேன் பேர்வழி என்று அனுப்பிவைப்பது யார்????? மறைமுகமாக இந்த விவசாயம் தானே!!! எனவே இங்கே கண்மூடி தனமான விவசாயம் என்பது கால காலமாக நடக்கிறது. இது தொடரும் என்றால் இந்த முறைபடுத்தாத விவசாயமே உங்களை வீழ்த்தும். பெரும் தன்னேர்ர் பிரச்சனைக்கு இந்த விவசாயமே காரணம் ஆகும். அதற்கான காலம் மிக விரைவில் நீங்கள் எதிர்பார்ப்பீர்.}

மீண்டும் கூறுகிறேன் இந்தியாவின் தண்ணீர் வளத்தில் 80% விவசாயத்திற்குத் தான் பயன்படுத்துகிறோம். நமக்கு இருக்கவேண்டிய அக்கறை அதை முறையாகப் பயன்படுத்துகிறோமா என்பது தான். தண்ணீர் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் நிச்சயம் விவசாயம் செய்து அதைத் தேவை என்றால் ஏற்றுமதி செய்யலாம். ஆனால் தண்ணீர் கட்டுப்பாடு நிலவும் பகுதிகளிலும் கண்மூடிதனாமாக அரிசி போன்ற தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களைப் பயிர் செய்வது உண்மையில் நாட்டுக்கு நல்லதே அல்ல.

நிலத்தடி நீர் எடுத்து விவசாயம் செய்யவேண்டுமா??? கொஞ்சமது தேவைக்கு விவசாயம் செய்யவேண்டும் அது நியாயம் இருக்கு. உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் அளவுக்கு இந்திய வளம் இல்லை. அதே நேரம் கண்மூடித்தனமான விவசாயமும் ஏற்க முடியாது. நீர் வளம் அனைவரது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும்.

Agronomy அதிகம் ஆய்வுகள் செய்யவேண்டும். மிகக் குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் என்ன என்ன விவசாயங்கள் செய்யமுடியும் எப்படி என்று ஆய்வுகள் வேகபடுத்தி – ஒரு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும். எல்லாப் பக்கமும் அரிசி கோதுமை விவசாயம் செய்ய முடியாது – குறைந்த நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் தடை கூட செய்யலாம் தவறே அல்ல. அதற்குப் பதிலாக மாற்று விவசாயம் சிந்திக்க வேண்டும். இது தான் இந்த அடுத்த 15வருடத்தில் நாம் செய்யவேண்டியது. நாம் என்றால் தமிழகம் , கர்நாடகம் மட்டும் அல்ல அனைத்து இந்திய மாநிலங்களிலும் விவசாயம் முறைப்படுத்தப்படவேண்டும். தீவிரமாக நீர் ஆதாரங்களைக் கண்காணிக்க வேண்டும். கிடைக்கும் தண்ணீரை சரியாக ஒரு சொட்டு கூட வீணாகத வண்ணம் தெளிவான நீர் மேலாண்மை அவசியமாகிறது. இது தான் நிரந்தர தீர்வை கொடுக்கும். விவசாயம் மீது ரெம்ப சென்டிமென்ட் கொள்வதும் முட்டாள்தனமே. ஏன் என்றால் விவசாயம் மூலமே மறைமுகமாக நீர் இங்கே ஏற்றுமதி ஆகிறது.

நீதிமன்ற ஆணையை மத்திய அரசு மதிக்கவில்லை என்று கூறும் இதே போராட்டத்தை தூண்டும் அனைவரையும் நான் கேட்கிறேன் மீத்தேன் எரிவாயு திட்டம் , அணுவுலை, நிரூட்ரினோ என்று எந்த போராட்டத்தில் நீங்கள் நீதிமன்ற ஆணையை ஏற்று மதித்து நடந்து கொண்டீர்? அப்போ மட்டும் நிதிமன்றம் காசு வாங்கிட்டு தீர்ப்பு கொடுக்கும் என்று வெக்கமே இல்லாமல் உச்ச நீதிமன்றத்தை குறை சொன்ன இதே வாய் இன்று நீதி , தீர்ப்பு என்று பேசுகிறதே!!! இன்று நிரூட்ரினோ திட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் கூட நீதிமன்ற ஆணையை காதில் கேட்ட நடக்கிறது?? எனவே நீதி மன்றத்தை மாநில மத்திய அரசு விட இந்த போராட்டம் தூண்டும் கூட்டம் தான் எப்போதுமே மதிக்காது நடந்து கொண்டுள்ளன. இன்று மட்டும் நடிக்கிறார்கள்!!!

நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால் அதை ஏற்று அனைவருமே நடக்கவேண்டும் – இல்லை சமூகம் அழிவை சந்திக்கும். அது அரசு என்றாலும் சரி – மக்கள் என்றாலும் சரி.

நீதி தேவதை மதிக்கப்படவேண்டும். காவேரி மேலாண்மை வாரியம் அமைந்தே தீரவேண்டும். அதே நேரம் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் தேசத்திற்கு எதிரான பிரிவினைவாதிகள் அடித்து ஒடுக்கபடவேண்டும். தேசிய கொடி எரித்தவனை தூக்கில் ஏற்றுங்கள்.

நான் மோடி அவர்களின் நிர்வாக திறனை வெகுவாக மதிக்கிறேன். இந்த விசயத்தில் நான் மட்டும் அல்ல அனைத்து மோடி ஆதரவாளர்களும் வருத்தம் அடைகிறோம். தாமதபடுத்தாமல் காவேரி மேலாண்மை வாரியம் அல்லது ஏதாவது ஒரு வாரியம் வச்சு கொஞ்சம் இந்த நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்த ஆவன செய்யவேண்டும். இது தமிழக மக்களின் உரிமை.

நிர்வாக காரணங்களால் தாமதம் ஆனாலும் நிச்சயம் ஓரிரு மாதங்களில் தீர்வு கிடைக்கும் என்று மோடி அவர்களை நம்புகிறேன்.

கருத்து:- மாரிதாஸ்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version