- Ads -
Home சினிமா சினி நியூஸ் வெள்ளிக்கிழமை இரவு காய்ச்சல்! தண்ணியடிக்க எதுக்கு பில்டப்.. தீட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

வெள்ளிக்கிழமை இரவு காய்ச்சல்! தண்ணியடிக்க எதுக்கு பில்டப்.. தீட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

str

சிம்பு, ஜெய்யுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பிரேம்ஜி, போட்ட ட்வீட்டுக்கு கீழே சிம்பு ரசிகர்கள் அவரை எச்சரித்து வருகின்றனர்.

சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான வந்தா ராஜாவாதான் படம் படுதோல்வியை சந்தித்தது.

தற்போது மீண்டும் கம்பேக் ஆகியுள்ள சிம்பு, மஹா, மாநாடு என பிசியாக நடித்து வருகிறார்.

நடிகர் சிம்புவின் நீண்ட கால நண்பர்களான பிரேம்ஜி மற்றும் ஜெய்யுடன் சிம்பு இருக்கும் புகைப்படத்தை நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, Friday Night Fever என கேப்ஷன் கொடுத்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள், தொடர்ந்து பிரேம்ஜியை திட்டியும் எச்சரித்தும் வருகின்றனர்.

“இப்போதான் சிம்பு உருப்புடியா இருக்கார், அவரை கெடுத்துடாத.. 50 கோடி ரூபா புராஜெக்ட் அதுல மண்ணு அள்ளி போட்டுடாத” என நடிகர் பிரேம்ஜி பதிவிட்டுள்ள பார்ட்டி மோட் புகைப்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள், பிரேம்ஜியை திட்டித் தீர்த்து வருகின்றனர். மாநாடு படத்தின் ஷூட்டிங் உங்க பார்ட்டியால பாதிக்காம இருக்கணும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

மறுபடியும் பார்ட்டி மோடுக்கு நடிகர் சிம்பு சென்று விட்டால், மஹா மற்றும் மாநாடு படங்களின் ஷூட்டிங்கிற்கு ஒழுங்கா காலையில் எழுந்து போகாமாட்டாரோ என்ற அச்சம் சிம்பு ரசிகர்களிடம் மீண்டும் எழுந்துள்ளது. இதனால், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தலைவனை கெடுக்காதடா மங்கி சங்கி என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை நைட் கூடா பார்ட்டி கொண்டாடுற சிம்பு, பிரேம்ஜி மற்றும் ஜெய் கூட்டணியை பார்த்த ரசிகர்கள் திட்டி வரும் நிலையில், இந்த நெட்டிசன், மாநாடு படத்தில் ஜெய்யுமா? நடிக்கிறாரு என ஆச்சர்யத்துடன் கேட்கிறார். சிம்புவின் நீண்ட கால நண்பர் ஜெய் என்பதால், அவ்வப்போது, அவர்கள் ஒன்றாக இணைந்து பார்ட்டி பண்ணுவது வழக்கம் என்பது இவருக்கு தெரியாது போல..

இப்படி நைட் பார்ட்டி பண்ணிட்டே இருந்தா உங்க Tshirt மட்டுமில்ல marital status Single லா தான் bro எப்பவுமே இருக்கும். வாழ்க்கையில் ஓர் அளவிற்கு தான் bro பார்ட்டி பண்ணனும். ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’.” என இந்த நெட்டிசன் வாழ்க்கை தத்துவங்களை எல்லாம் கமெண்ட் செய்து ஃப்ரீ அட்வைஸ் கொடுத்து வருகிறார்.

ஏன் டா மொட்டை பசங்களா.. எல்லோரும் ஒண்ணா சேர்ந்து தண்ணி அடிக்க போறீங்க.. அதுக்கு எதுக்குடா பில்டப்பு என இந்த நெட்டிசன் மூன்று பேரையும் சேர்த்து வச்சு திட்டியுள்ளார். மேலும், சிம்பு ரசிகர்கள் பலரும், அண்ணா தண்ணி அடிக்க போகாதீங்க, மாஸ்டர் ஷூட் முக்கியம் என பயம் கலந்த அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version