- Ads -
Home சினிமா சினி நியூஸ் 7 வருடம் பிரிந்த முதல் மனைவி பற்றி..  பீட்டர்பால்!

7 வருடம் பிரிந்த முதல் மனைவி பற்றி..  பீட்டர்பால்!

பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் வனிதாவை திருமணம்

வனிதா – பீட்டர் பால் திருமணம் பேசு பொருளாகியுள்ள நிலையில் இருவரும் சேர்ந்து ரொமான்ஸ் பொங்க வீடியோ வெளியிட்டுள்ளனர்.

d621803ca1ef9e045f4007db0f7bed43

நடிகை வனிதா கடந்த 27ஆம் தேதி விஷ்வல் எடிட்டரான பீட்டர் பால் என்பவரை காதல் திருமணம் செய்தார். வீட்டிலேயே கிறிஸ்தவ முறைப்படி அவர்களின் திருமணம் நடைபெற்றது.

ஆனால் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீஸில் புகார் அளித்தார்.

பீட்டர் பாலின் அலுவலகத்திற்கு சென்ற வனிதா, தான் எடுத்து சென்ற உணவை தனது கணவருக்கு பரிமாறுகிறார். ஏற்கனவே பீட்டர் பால் நான் வெஜ் கூட சாப்பிட மாட்டார் அவர் ஒரு டீடோட்லர் என கூறியிருந்தார் வனிதா. ஆனால் பீட்டர் பாலுக்கு அவர் கீரைஸும் சிக்கனும் பரிமாறினர்.

அதனை பார்த்த பீட்டர் பால் கீ ரைஸ் மட்டும் தானே சொன்னாய், சிக்கன் பற்றி எதுவுமே சொல்லவில்லையே என ஆர்வமாய் கேட்கிறார். பின்னர் தான் சாப்பிட்டுவிட்டு தனது மனைவிக்கும் ஊட்டி விடுகிறார். அதன் பிறகு வனிதா, சில கேள்விகளை கேட்க, அதற்கு பதிலளிக்கிறார் பீட்டர் பால்.

இருவரும் பேச தொடங்குவதற்கு முன்பு இந்த பேட்டி எதற்கு என விளக்கம் கொடுத்தார் வனிதா. அதில் நான் ஏதோ உங்களை பூட்டி வைத்திருப்பதாக எதிர்க்கட்சியை சேர்ந்த உங்கள் மனைவி சொல்கிறார். நான் என்ன உங்களை பூட்டியா வைத்திருக்கிறேன் என கேட்கிறார்.

அதற்கு பதிலளிக்கும் பீட்டர் பால், ஆமாம் நீ என்னை பூட்டிதான் வைத்திருக்கிறாய் என கூற, அடப்பாவி என்கிறார் வனிதா. அதற்கு ரியாக்ட் செய்யும் பீட்டர் பால், அதாவது நீ உன் இதயத்தில் என்னை பூட்டி வைத்திருக்கிறாய் என கூறினார். அதற்காகதான் லாக் அன்ட் கீயில் வெட்டிங் ரிங் வாங்கியிருக்கிறோம் என்றார் வனிதா.

தொடர்ந்து பேசிய பீட்டர் பால், என்னை உன்னைப்போல் பூட்டி வைக்காமல் விட்டதால் தான், இவ்ளோ தூரம் வந்தது என்று கூறினார். மற்றவர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாம் என்னுடைய சில கேள்விகளுக்கு பதில் சொல்லுவீங்களா என்று கேட்டார். அதற்கு நிச்சயமாக சொல்லுவேன் என்று கையை பிடித்தார் பீட்டர்.

அதற்கு வனிதா கையை பிடிக்கிறீங்க, குழந்தைங்கல்லாம் பார்ப்பாங்க என தங்களின் லிப்லாக்கை கிண்டலடித்த நெட்டிசன்களை வாரினார் வனிதா. தொடர்ந்து பேசிய பீட்டர் பால் தனது குடும்பம், படிப்பு, வேலை குறித்த தகவல்களை பகிர்ந்தார். இந்திய சினிமாவில் 1500க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளதாக கூறியுள்ளார்.

இன்டஸ்ட்ரியில் என்னை எல்லாருக்கும் தெரியும். ஹாலிவுட் படங்களிலும் பணிபுரிந்துள்ளேன். ஹாரி பாட்டர் உட்பட பல படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். பாலிவுட் படம் டைரக்ட் பண்ணும் திட்டத்தில் இருந்தபோதுதான் நாம் சந்தித்தோம். என் அப்பாவின் முதல் மனைவிக்கு 2 பிள்ளைகள், எங்க அம்மாவுக்கு 3 பிள்ளைகள் என்று கூறினார் பீட்டர் பால்.

உடனே குறுக்கிட்ட வனிதா என் அப்பாவுக்கும் ரெண்டு பொண்டாட்டி, உங்க அப்பாவுக்கும் ரெண்டு பொண்டாட்டி என்றார். மேலும் எலிசபெத்துடன் எப்படி திருமணம் நடந்தது என்று கேட்டார் வனிதா. அதற்கு பதிலளித்த பீட்டர் பால், அது ஒரு அரென்ஜ்டு மேரேஜ்தான். எங்கள் அணியின் கஸின் சிஸ்டர் அவர்.

அண்ணன் திருமணத்தின் போது சந்தித்தோம். அதன்பிறகு அப்படியே ட்ராவல் ஆனது. கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக்கொண்டோம். 2000ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. முதலில் மகன் பிறந்தான். அடுத்து மகள். 2005ஆம் ஆண்டு வரை ஸ்மூத்தாகதான் சென்றார் என கூறினார்

[embedded content]

[embedded content]

Source: Vellithirai News

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version