- Ads -
Home சினிமா சினி நியூஸ் முழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி!

முழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி!

20fe6aebc2e9a4f46f6bb4132a070295

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்… 

தமிழ் திரை ரசிகர்களை  தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ் பி பாலசுப்பிரம ணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்  ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம்
இருமல் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 45,000

அவர் பெற்ற தேசிய விருதுகள் ஆறு இந்திய அரசின் உயரிய விரு துகளான பத்மஸ்ரீ பத்மபூஷன் போன்ற விருதுகளை பெற்ற இசை மேதை அவர் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் இருந்த மாபெரும் சொத்து அவருடைய மனிதநேயம்

எஸ் பி பாலசுப்பிரமணியத்தை எந்த இந்தியனும் ஒரு பாடகராக மட்டும் பார்த்ததில்லை   இந்தியாவின் பெருமைக்குரிய விலைமதிப்பில்லாத சொத்தாகத் தான் பார்த்தார்கள்

தமிழ் சினிமா உலகிற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட  எஸ்பி பால சுப்பிரமணியம் தென்னிந்தியாவின் நான்கு பெருமைக்குரிய முதல்வர்கள் ஆன கலைஞர் எம்ஜிஆர் என் டி ராமாராவ் ஜெயலலிதா ஆகிய நால்வரோடும் இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பினைப் பெற்றவர்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் விடுத்துள்ள இரங்கல் செய்தி எஸ் பி பாலசுப்ரமணியம் எப்படிப்பட்ட உறவினை எல்லா தலைவர்களோடும் வைத்துக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு 

விலைமதிப்பில்லாத அந்த இசைக் கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்று மட்டுமே அவருக்கு தருகின்ற சரியான அங்கீகாரமாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்த முன்வந்துள்ள முதல்வர் அவர்களுக்கு கலை உலகின் சார்பில் இசை ரசிகர்களின் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

நமது பாரதப் பிரதமரும் தமிழக  தமிழக முதல்வரும் கலைத் துறையினர் மீது எந்த அளவு அன்பும் பாசமும் கொண்டிருக் கிறார்கள் என்பதை மொத்த கலை உலகமும் நன்கு அறியும்

அதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு தான் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகின் சார்பாக பாரதிராஜா என்று குறிப்பிட்டுள்ளார். 
Source: Vellithirai News

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version