- Ads -
Home சினிமா சினி நியூஸ் காதலிப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வேன் ! நடிகை தமன்னா !

காதலிப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வேன் ! நடிகை தமன்னா !

thamana karthiகேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. இவர், தெலுங்கு படங்களிலும் நிறைய நடித்து வந்தார். இதனால், தெலுங்கிலும் அவர் முன்னணி நடிகையாகவே இருந்து வந்தார்.

தமிழிலும் நிறைய படங்களில், முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்திருந்தாலும், அவருக்கு பொருத்தமான ஜோடி நடிகர் என்றால் அது கார்த்தி தான். பையா படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்திருக்க, இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப் பட்டது.சிறுத்தை படத்திலும் கார்த்தியுடன் சேர்ந்து நடித்தார் தமன்னா. ஆனால், இருவருமே அதை மறுத்து விட்டனர். இந்நிலையில், நடிகை தமன்னா, கார்த்தியுடன் தனக்கு காதல் ஏற்பட்டதா என்பது குறித்து, ஒரு பேட்டியில் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:எல்லா நடிகர்களிடம் எப்படி பழகுகிறேனோ அப்படித்தான் நான் நடிகர் கார்த்தியுடன் பழகினேன். பையா படத்தில், காட்சிகளுக்கு என்ன தேவையோ, அப்படித்தான் இருவரும் நடித்தோம். ஆனால், இருவரும் நெருக்கமாக நடித்திருப்பதாக கூறி, இருவரும் காதலிப்பதாகத் தகவல் பரப்பி விட்டனர். பையா படத்தில், எங்கள் இருவருக்கும் நல்ல ஜோடிப் பொருத்தம் இருந்தது உண்மை. அதை வைத்து நாங்கள் காதலிப்பதாக சொல்லி விட்டனர்.கார்த்தியை ஒரு சக நடிகராக மட்டும்தான் பார்த்தேன். நட்பு அடிப்படையில் கூட இருவரும் நெருங்கிப் பழகியதில்லை. அப்படியிருக்க இப்படி வதந்தி பரப்பலாமா? அதில் தொடர்புள்ள பெண்ணாக இந்த வதந்திக்கு பதில் சொல்லும் கடமை எனக்கு உள்ளது. யாரை காதலித்தாலும், அதை முதலில் வெளிப்படுத்துவது  நானாகத்தான் இருப்பேன். என் ரசிகர்களுக்கு அதை தெரியப்படுத்துவதில் எனக்கும் பெரிதும் மகிழ்வே இருக்கும். இவ்வாறு தமன்னா கூறியிருக்கிறார்.

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் தமன்னா நடித்துள்ள சை ரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழில் பெட்ரோமாக்ஸ் எனும் படத்தில் யோகி பாபு, சத்யன், காளிவெங்கட் உள்ளிட்டோருடன் சேர்ந்து தமன்னா நடிக்கிறார். பிஸியாக நடித்து வரும் தமன்னா, தனது காதல் விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version